பூடான் மன்னருடன் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சந்திப்பு

பூடான் மன்னருடன் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சந்திப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், அண்டை நாடான பூடானுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். தலைநகர் திம்​பு​வில் பூடான் மன்​னர் ஜிக்மே கேசர் நாம்​கியேல் வாங்​சுக்கை அவர் நேற்று சந்​தித்​தார்.

இது குறித்து உச்ச நீதி​மன்​றம் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில், ”இந்த சந்​திப்​பில் இந்​தியா - பூடான் இடையி​லான உறவை முன்னெடுத்​துச் செல்ல இரு​வரும் உறு​திப்​ பாட்டை வெளிப்படுத்தினர். பூடானில் நீதித்​துறையை டிஜிட்​டல் மயமாக்குவ​தில் தொழில் ​நுட்ப உதவி மற்​றும் ஆதரவை வழங்குவ​தாக தலைமை நீதிபதி உறுதி அளித்​தார். இரு நாடு​கள் இடையி​லான கலாச்​சார, ஆன்​மீக மற்​றும் அறி​வு​சார் பிணைப்பை அவர்​கள் உரை​யாடல் மீண்​டும் உறு​திப்படுத்​தி​யது” என்று கூறப்பட்டுள்ளது.

பூடான் மன்னருடன் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சந்திப்பு
பிஹார் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் நிதிஷ் குமார் - மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in