​திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்​முறையீட்டு மனு ஏற்பு

​திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்​முறையீட்டு மனு ஏற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ​​திருப்​பரங்​குன்​றம் மலை மீது உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபத்தை ஏற்​றும் விவ​காரத்​தில் சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் விசா​ரணைக்கு ஏற்​றுள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை மீது உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை உத்​தர​வுக்கு எதி​ராக​வும், தனி நீதிபதி உத்​தரவை ரத்து செய்​யக் கோரி​யும் மதுரை மாவட்ட ஆட்​சி​யர் கே.ஜே. பிர​வீன்​கு​மார் சார்​பில் வழக்​கறிஞர் சபரீஷ் சுப்​ரமணி​யன் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை அவசர​மாக விசா​ரிக்க கோரி உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன்பு தமிழக அரசின் சார்​பில் வழக்​கறிஞர் சபரீஷ் சுப்​ரமணி​யன் முறை​யிட்​டார்.

ஆனால் இதை அவசர வழக்​காக விசா​ரிக்க மறுத்​து​விட்ட தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் உரிய ஆவணங்​களு​டன் சமர்ப்​பித்​தால் தமிழக அரசின்​ மனு பட்​டியலிட அனு​ம​திக்​கப்​படும்​ என உத்​தர​விட்​​டார்​.

​திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்​முறையீட்டு மனு ஏற்பு
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக கூட்டணி எம்.பி.க்கள் அமளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in