

லக்னோ: மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது, திரையில் செலவிடும் நேரத்தை குறைப்பது, விமர்சன மற்றும் தர்க்கரீதியான சிந்தனையை வளர்ப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு உ.பி. அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் கட்டாயம் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் (தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி) பார்த்தசாரதி சென் சர்மா கடந்த 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், "ஆங்கிலம், மற்றும் இந்தி செய்தித்தாள்கள் வாசிப்பது, பள்ளிகளின் தினசரி வாசிப்புக் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட வேண்டும். தினசரி செய்திகளை வாசிப்பதற்காக 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.