ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 900-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 900-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசுப் பணி​யாளர் தேர்​வில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​தது. இதைக் கண்​டித்து மாணவர்கள் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதன் ஒரு பகு​தி​யாக கடந்த ஆகஸ்ட் 21 அன்று ஹசா​ரி​பாக்​கில் உள்ள கோர்ரா பகு​தி​யில் முதல்​வர் ஹேமந்த் சோரனின் உரு​வப்​பொம்​மையை போராட்​டக்​காரர்​கள் எரிக்க முயன்​றனர். அப்போது, போராட்​டக்​காரர்​கள் மற்​றும் காவல் துறை​யினர் இடையே மோதல் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், அரசுப் பணி​யைத் தடுத்​தல் மற்​றும் காவல் துறை​யினர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக சதார் வரு​வாய் வட்ட அலு​வலர் அசுதோஷ் குமார் அளித்த புகாரின் பேரில் 18 பேர் மற்​றும் 700 அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், அகில பார​திய வித்​யார்த்தி பரிஷத் (ஏபி​விபி) அமைப்​பைச் சேர்ந்த அனீஷ் ராய், தேர்வு முறை​கேட்டை எதிர்த்​துப் போராடிய மாணவர்​கள் மீது ஆளும் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்​எம்) கட்​சி​யினரும், அதன் மாவட்​டத் தலை​வர் சஞ்​சய் சிங்​கும் தாக்​குதல் நடத்​தி​ய​தாக அளித்த புகாரின் பேரில், சஞ்​சய் சிங் உட்பட 31 பேர் மீது வழக்​குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சதார் வட்​டார ஆய்​வாளர் மனோஜ் குமார் சிங், போராட்டக்​காரர்​கள் மீது அளித்த புகாரின் அடிப்​படை​யில், 210 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது​வரை பெயர் குறிப்​பிடப்​பட்ட 28 பேர் மற்​றும் 900-க்​கும் மேற்​பட்ட அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் மீது காவல் துறை வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது.

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 900-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
ஒழிக்கப்பட்ட நக்சல்கள்... வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in