தொகுதி மேம்பாட்டு நிதியில் லஞ்சம் பெற்றதாக புகார்: ராஜஸ்தானில் 3 எம்எல்ஏ.க்கள் பதவிக்கு சிக்கல்

தொகுதி மேம்பாட்டு நிதியில் லஞ்சம் பெற்றதாக புகார்: ராஜஸ்தானில் 3 எம்எல்ஏ.க்கள் பதவிக்கு சிக்கல்
Updated on
1 min read

புதுடெல்லி: ராஜஸ்​தானில் தொகுதி மேம்​பாட்டு நிதி​யில் லஞ்​சம் வாங்க முயன்று சிக்​கிய 3 எம்​எல்​ஏக்​களின் பதவி பறிக்​கப்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்த மூவரிட​மும் ராஜஸ்​தானின் ‘தெய்​னிக் பாஸ்​கர்’ நாளேடு தனித்​தனி​யாக ‘ஸ்ட்​ரிங் ஆப்​ரேஷன்’ நடத்​தி​யது. இதற்​காக, பெயரள​வில் ஒரு நிறு​வனத்தை தொடங்கி இருந்​தது. இந்த மூவரும் தங்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதி பணி​களுக்​காக பல லட்​சம் லஞ்​ச​மாகக் கேட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக கடந்த டிசம்​பர் 14-ல் செய்தி வெளி​யாகி இருந்​தது. இந்த நடவடிக்​கை​யில், ஆளும் பாஜக​வின் ரேவந்த ராம் டங்​கா, எதிர்​க்கட்​சி​யான காங்​கிரஸின் அனிதா ஜாதவ், சுயேச்சை எம்​எல்​ஏ​வான ரிது பனாவத் ஆகியோர் சிக்​கி​யுள்​ளனர்.

பாஜக​வின் டங்கா ரூ.50 லட்​சம் பணிக்கு 40% லஞ்​ச​மாகக் கேட்​டுள்​ளார். காங்​கிரஸின் அனிதா ஜாதவ் ரூ.50,000 பெற்​றுக்​கொண்டு ரூ.80 லட்​சம் மதிப்​பிலான பணி அளிக்க மாவட்ட ஆட்​சி​யருக்கு சிபாரிசு கடிதம் அளித்​துள்​ளார். சுயேச்சை எம்​எல்ஏ ரிது, லஞ்​சத் தொகை​யாக ரூ.40 லட்​சம் நிர்​ண​யித்​துள்​ளார்.

இதைத் தொடர்ந்து அப்​பணி தொடர்​பான அதி​காரி​களும் தனி​யாக அந்த நிறு​வனத்​திடம் லஞ்​சத் தொகைக்கு பேரம் பேசி​யுள்​ளனர். இந்த வகை​யில் லஞ்​சத்​தொகை சுமார் 70 சதவீதம் போக மக்​களுக்​கான பணிக்கு 30 சதவீதமே மிஞ்​சும் நிலை ஏற்​பட்​டது. இவர்​கள் லஞ்​சம் கேட்​கும் காட்​சிப் பதிவு​கள் ஊடகத்​தில் மிகத் தெளி​வாக வெளி​யாகின.

இதையடுத்​து, ராஜஸ்​தானின் முதலமைச்​சர் பஜன் லால் சர்மா லஞ்​சம் கேட்ட அதி​காரி​கள் மீது விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளார். சட்​டப்​பேரவை சபா​நாயகர் வாசுதேவ் தேவ்​னானி, எம்​எல்​ஏக்​கள் மீது விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளார். பாஜக மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகளும் தங்​கள் எம்​எல்​ஏக்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பி, விளக்​கம் கேட்​டுள்​ளன.

சபா​நாயகர் உத்​தர​வின் பேரில் ராஜஸ்​தான் சட்​டப்​பேர​வை​யின் நெறி​முறை​கள் குழு விசா​ரணை செய்ய உள்​ளது. பாஜக மூத்த எம்​எல்ஏ கைலாஷ் சந்த வர்மா தலை​மையி​லான இக்​குழு​வால், 3 எம்​எல்​ஏக்​களும் குற்​ற​வாளி​கள் என முடிவு எடுக்​கப்​படும் வாய்ப்​பு​கள் அதி​கம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால் சபா​நாயக​ரால் இந்த மூவரும் எம்​எல்ஏ பதவியி​லிருந்து நீக்​கப்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

தொகுதி மேம்பாட்டு நிதியில் லஞ்சம் பெற்றதாக புகார்: ராஜஸ்தானில் 3 எம்எல்ஏ.க்கள் பதவிக்கு சிக்கல்
இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை விலக்க முயன்ற நிதிஷ் குமார்: ‘சங்கி’ என விமர்சித்த ஆர்ஜேடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in