டெல்லி​​யில் காற்று மாசுவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் அமல்

பார்க்கிங் கட்​ட​ணம் இருமடங்கு உயர்வு
டெல்லி​​யில் காற்று மாசுவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் அமல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: டெல்லி​​​யில் காற்று மாசு தீவிர பிரச்​சினை​யாக இருந்து வரு​கிறது. தற்​போது காற்​றின் தரம் மோச​மான நிலையை எட்​டி​யுள்​ள​தால் அங்கு கிராப்-1 கட்​டுப்​பாடு அமல்​படுத்​தப்​பட்டு உள்ளது.

இது தொடர்​பாக காற்​றுத் தர மேலாண்மை ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “டெல்​லி​யின் காற்​றின் தரக் குறி​யீடு 244 (மோச​மான நிலை) ஆகக் கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. மேலும், வரும் நாட்​களி்லும் ‘மோச​மான’ பிரி​விலேயே நீடிக்​கும் என்று இந்​திய வானிலை ஆய்வு மையம் கணித்​துள்​ளது. எனவே உடனடியாக கிராப்-1 கட்​டுப்​பாடு​கள் அமல்​படுத்​தப்​படு​கின்​றன” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கிராப்-1 குறித்து டெல்லி சுற்​றுச்​சூழல் அமைச்​சர் மஞ்​சிந்​தர் சிங் சிர்சா கூறும்​போது, “மாசுக் கட்​டுப்​பாட்​டுச் சான்​றிதழ் இல்​லாத வாக​னங்​களுக்கு எரிபொருள் வழங்​கப்​ப​டாது. மெட்ரோ வாகன நிறுத்​து​மிடங்​களைத் தவிர டெல்லி முழு​வதும் வாகன நிறுத்​து​மிடக் கட்​ட​ணம் இரட்​டிப்​பாக்​கப்​படும்.

டெல்லி மாநக​ராட்சி, அரசு அலு​வல​கங்​களில் சுழற்சி முறையி​லான பணி நேரங்​களும், வீட்​டிலிருந்து பணிபுரி​யும் ஏற்​பாடு​களும் அறி​முகப்​படுத்​தப்​படும். கட்​டு​மான, இடிப்​புப் பணி​களுக்​குக் கட்டுப்​பாடு​கள் விதிக்​கப்​படும். திறந்​தவெளி​யில் குப்​பைகளை எரிக்க தடை வி​திக்​கப்​பட்டுள்ளது'' என்றார்.

டெல்லி​​யில் காற்று மாசுவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் அமல்
‘போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை’ - ஐநா நிபுணர்கள் குற்றச்சாட்டும், இந்தியா மறுப்பும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in