போதைப் பொருள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆந்திர அமைச்சர் அனிதா எச்சரிக்கை

ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா

ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா

Updated on
1 min read

திருப்பதி: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்களை விடமாட்டோம் என்று ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா எச்சரிக்கை விடுத்தார்.

ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்தனர். பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.

இதன் பின்னர் திருப்பதியில் உள்ள சிறைச்சாலையை அனிதா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆந்திராவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ ஏழுமலையானை வேண்டிக் கொண்டேன்.

திருப்பதியில் புதிய மாவட்ட சிறைச்சாலை கட்டப்பட வேண்டும். ஆந்திராவில் போதைப் பொருட்களை யார் விற்பனை செய்தாலும் அல்லது அதற்கு பின்னணியில் யார் இருந்தாலும் அவர்களை விடமாட்டோம். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக ஆந்திர மாநிலம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என்றார்.

<div class="paragraphs"><p>ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா</p></div>
நுரையீரல் புற்றுநோய்க்கு 7 நிமிடத்தில் சிகிச்சை: இந்தியாவில் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in