நுரையீரல் புற்றுநோய்க்கு 7 நிமிடத்தில் சிகிச்சை: இந்தியாவில் அறிமுகம்

ஒரு டோஸ் ஊசி விலை ரூ.3.7 லட்சம்
நுரையீரல் புற்றுநோய்க்கு 7 நிமிடத்தில் சிகிச்சை: இந்தியாவில் அறிமுகம்
Updated on
1 min read

புதுடெல்லி: நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு 7 நிமிடத்தில் சிகிச்சை அளிக்கும் ஊசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது.

டெசென்ட்ரிக் (Tecentriq) என்று அழைக்கப்படும் இந்த மருந்து, 'ரோச் பார்மா இந்தியா' நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நோயெதிர்ப்பு சிகிச்சை முறையை வேகமாகவும் வசதியாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பல மணி நேரம் எடுக்கக்கூடிய வழக்கமான நரம்பு வழி (IV) சிகிச்சையைப் போலல்லாமல், இந்த புதிய ஊசி தோலுக்கு அடியில் செலுத்தப்படுகிறது. இதற்கு சுமார் 7 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்தியாவில் மிகவும் பொதுவான நுரையீரல் புற்றுநோய் வடிவமான 'சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயால்' (Non-Small Cell Lung Cancer - NSCLC) பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக இந்த சிகிச்சை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.3.7 லட்சம் ஆகும். மேலும் பல நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது சுமார் 6 டோஸ்கள் வரை தேவைப்படும்.

இந்த ஊசியின் அறிமுகம் புற்றுநோய் பராமரிப்பில் இம்யூனோதெரபியின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி, ஆரோக்கியமான செல்களையும் சேதப்படுத்தும் கீமோதெரபி போலல்லாமல், இம்யூனோதெரபி என்பது புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் சொந்த நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது. கீமோதெரபியைவிட குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் பல நோயாளிகள் இம்யூனோதெரபியையே விரும்புகிறார்கள்.

இருப்பினும், ஏற்கெனவே அதிக செலவாகும் புற்றுநோய் சிகிச்சையால் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்த சிகிச்சையின் அதிக விலை ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

நுரையீரல் புற்றுநோய்க்கு 7 நிமிடத்தில் சிகிச்சை: இந்தியாவில் அறிமுகம்
ஆம் ஆத்மி மூத்த தலைவர் தீபக் சிங்லா கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in