இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை: விமான போக்குவரத்து அமைச்சர் ராம்​ மோகன் உறுதி

இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை: விமான போக்குவரத்து அமைச்சர் ராம்​ மோகன் உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: இண்​டிகோ நிறு​வனம் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று விமான போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு கூறி​யுள்​ளார்.

இண்​டிகோ விமான சேவை 7-வது நாளாக நேற்றும் பாதிக்கப் பட்டது. நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து மாநிலங்​களவை​யில் விமான போக்​கு​வரத்துத் துறை அமைச்​சர் ராம்​ மோகன் நாயுடு கூறிய​தாவது:

விமானிகள் பணிநேரம் குறித்த புதிய விதி​கள் அமலுக்கு வந்​தத​தால், இண்​டிகோ நிறு​வனம் பைலட் பற்​றாக்​குறை பிரச்​சினையை சந்​தித்​தது. இதனால் நூற்​றுக்​கணக்​கான விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. ஆயிரக்​கணக்​கான பயணி​கள் தவித்​தனர்.

நாங்​கள் விமானிகள், விமான ஊழியர்​கள் மற்​றும் பயணி​கள் மீது அக்​கறை செலுத்​துகிறோம். இதை அனைத்து விமான நிறு​வனங்​களுக்​கும் நாங்​கள் தெளிவுபடுத்​தி​யுள்​ளோம். விமானிகள் மற்​றும் ஊழியர்​களின் பணி நேர அட்​ட​வணையை தயாரிக்க வேண்​டியது இண்​டிகோ நிறு​வனத்​தின் பொறுப்​பு. அவர்​கள் தங்​கள் பணியை செய்​யாத​தால் பயணி​கள் தவித்​தனர்.

இந்த விவ​காரத்தை நாங்​கள் எளி​தாக எடுத்​துக் கொள்​ள​வில்​லை. நாங்​கள் கடும் நடவடிக்கை எடுத்து மற்ற விமான நிறு​வனங்​களுக்கு முன்​மா​திரியை ஏற்​படுத்​து​வோம். புதிய விதி​முறை​களை பின்​பற்​றாத நிறு​வனங்​கள் மீது கடும் நடவடிக்கை எடுப்​போம். இந்த விவ​காரம் குறித்து முழு விசா​ரணை நடத்​தப்​படும். விமான போக்​கு​வரத்து துறை​யில் அதிக நிறு​வனங்​கள் செயல்பட வேண்​டும் என அரசு விரும்​பு​கிறது. 5 பெரிய விமான நிறு​வனங்​களை வைத்​துக் கொள்​ளும் அளவுக்கு நாட்​டின் திறன் உள்​ளது. இவ்​வாறு ராம்​மோகன் நாயுடு கூறி​னார்.

அமைச்​சர் பதிலில் திருப்​தி அடை​யாத எதிர்​க்கட்சி உறுப்​பினர்​கள் மாநிலங்​களவையை விட்டு வெளிநடப்பு செய்​தனர்.

ரூ.827 கோடி ரீபண்ட்: இண்​டிகோ நிறு​வனம் இது​வரை விமானங்​களை ரத்து செய்​ததற்​காக பயணி​களுக்கு ரூ.827 கோடியை வழங்​கி​யுள்​ளது. கடந்த மாதம் 21-ம் தேதி முதல் டிசம்​பர் 7-ம் தேதி வரை 9,55,591 டிக்​கெட்​டு​களை ரத்து செய்து விமான கட்​ட​ணம் திருப்பி அளிக்​கப்​பட்​டுள்​ளது. விமானத்​தில் ஏற்​று​வதற்​காக சேகரிக்​கப்​பட்ட 4,500 முதல்​ 9,000 பைகள்​ மற்​றும்​ பெட்​டிகளை​யும்​ திரும்​ப வழங்​கி​யுள்​ளது.

இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை: விமான போக்குவரத்து அமைச்சர் ராம்​ மோகன் உறுதி
“அரசியலமைப்பும் பகவத் கீதையும் ஒன்றுதான்” - பவன் கல்யாண் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in