“அரசியலமைப்பும் பகவத் கீதையும் ஒன்றுதான்” - பவன் கல்யாண் கருத்து

“அரசியலமைப்பும் பகவத் கீதையும் ஒன்றுதான்” - பவன் கல்யாண் கருத்து
Updated on
1 min read

உடுப்பி: பகவத் கீதை​யும், அரசி​யலமைப்பு சட்​ட​மும் ஒன்​று​தான் என்று ஆந்​திர துணை முதல்​வரும், ஜன சேனா கட்​சித் தலை​வரு​மான பவன் கல்​யாண் தெரிவித்துள்​ளார்.

கர்​நாடக மாநிலம் உடுப்​பி​யில் உள்ள கிருஷ்ண மடத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பவன் கல்​யாண் கலந்​து​கொண்​டார். நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது:

இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் முகப்​புரை​யில், அரசுக் கொள்​கை​களின் வழி​காட்டு நெறி​முறை​கள் இருக்​கும் பக்​கத்​தில் கிருஷ்ணர் அர்​ஜுனனுக்கு பகவத் கீதை உபதேசம் செய்​யும் ஓவி​யம் உள்​ளது. அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் மதிப்​பீடு​களான சமூக நீதி, பொறுப்​புணர்​வு, சமத்​து​வம், நலவாழ்​வு, தர்​மத்தை நிலை​நாட்​டு​தல் ஆகியவை கீதை​யின் சாராம்​சத்​திலிருந்தே உரு​வானவை என்​பதை அந்த ஓவி​யம் உணர்த்​துகிறது.

தர்​மம் என்​பது நீதி​யின் தார்​மிக வழி​காட்​டி, அரசி​யலமைப்​புச் சட்​டம் என்​பது நீதி​யின் சட்​ட ரீ​தி​யான வழி​காட்​டி. இரண்​டும் ஒரே இலக்கை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளன. பகவத் கீதை​யும், அரசி​யலமைப்பு சட்​ட​மும் ஒன்​று​தான். கையால் எழுதப்​பட்ட அரசி​யலமைப்​புச் சட்​டம்​தான் பகவத் கீதை.

இந்த இரண்​டும் அமை​தி​யான, கருணைமிகுந்த சமு​தா​யத்தை உரு​வாக்க முயல்​கின்​றன. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​நிலை​யில் பவன் கல்​யாணின் பேச்​சுக்கு கர்​நாட​க காங்​கிரஸ் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

மூத்த காங்​கிரஸ் தலை​வர் பி.கே. ஹரிபிர​சாத் கூறும்​போது, “அரசி​யலமைப்​புச் சட்​டத்தை புரிந்து கொள்ள முடி​யாத பிரபலங்​கள்​தான் இது​போன்று பேசு​வார்​கள். அரசி​யலமைப்​புச் சட்​டம் என்​பது மதச்​சார்​பற்​றது. அதில் தர்​மத்​துக்கு இடம் கிடை​யாது” என்​றார்.

“அரசியலமைப்பும் பகவத் கீதையும் ஒன்றுதான்” - பவன் கல்யாண் கருத்து
மே.வங்கத்தில் ரூ.1,000 கோடியில் 3 பாபர் மசூதி: டிஎம்சி எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் புதிய அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in