

கோப்புப்படம்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரண்ட்ஸ் பூங்காவில் துணியில் சுற்றப்பட்ட ஒரு பொருளுடன் தெரு நாய் ஓன்று நேற்று முன்தினம் ஓடியது. அப்போது அமித் திரிவேதி என்பவர் சந்தேகம் அடைந்து அந்த நாயை துரத்தினார். இதில் அந்த நாய் அந்தப் பொருளை போட்டிவிட்டு ஓடிவிட்டது.
துணியை அகற்றியபோது பிறந்த குழந்தையின் சிதைந்த உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். கை, கால்கள் இல்லாத அந்த உடலில் மார்பு பகுதி சேதம் அடைந்திருந்தது.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் இக்குழந்தை பிறந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இதன் அடிப்படையிலும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.