நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தியில் புதிய சாதனை

நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தியில் புதிய சாதனை
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய வேளாண் அமைச்​சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: 2024-25 ஆண்​டில் நெல்​,கோது​மை, சோ​யாபீன்ஸ், நிலக்​கடலை உள்​ளிட்ட உணவு தானி​யங்​களின் உற்​பத்தி சாதனை அளவாக 357.32 மில்​லியன் டன்னை தொட்​டுள்​ளது.

இது, முந்​தைய 2023-24 உணவு தானிய உற்​பத்​தி​யான 332.29 மில்​லியன் டன்​னுடன் ஒப்​பிடும்​போது 7.65 சதவீதம் அதி​க​மாகும். 2024-25 காரீப் பரு​வத்​தில் நெல் உற்​பத்தி 122.77 மில்​லியன் டன்னை எட்டி சாதனை படைத்​துள்​ளது. இது, முந்​தைய ஆண்டு உற்​பத்​தி​யான 113.25 மில்​லியன் டன்​னுடன் ஒப்​பிடும்​போது 8.39 சதவீதம் அதி​க​மாகும்.

இதே​காலத்​தில் கோதுமை 117.94 மில்​லியன் டன், சோ​யாபீன்ஸ் 15.26 மில்​லியன் டன், நிலக்​கடலை 11.9 மில்​லியன் டன் உற்​பத்​தி​யாகி புதிய உச்சத்தை எட்​டி​யுள்​ளது. இவ்​வாறு புள்​ளி​விவரத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தியில் புதிய சாதனை
கழிவுப் பஞ்சு விலை உயர்வால் உற்பத்தியை 50% குறைக்க ஓஇ மில்கள் முடிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in