பாதுகாப்பற்ற கொள்கலனில் பெட்ரோலை சேமிப்பது அபாயம்: மத்திய அரசு எச்சரிக்கை

பாதுகாப்பற்ற கொள்கலனில் பெட்ரோலை சேமிப்பது அபாயம்: மத்திய அரசு எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கிறது. நுகர்வோர் பாதுகாப்பற்ற கொள்கலன்களில் பெட்ரோல் அல்லது எந்த எரிபொருளையும் எடுத்துச் செல்வது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும்’ என பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில்லறை விற்பனை நிலையத்தில், பெட்ரோல் பாதுகாப்பற்ற கொள்கலனில் எடுத்துச் செல்லப்படுவதை அறிந்தோம், இது பாதுகாப்பற்றது.

நுகர்வோர் பாதுகாப்பற்ற கொள்கலன்களில் பெட்ரோல் அல்லது எந்த எரிபொருளையும் எடுத்துச் செல்லவோ அல்லது சேமிக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் செயல்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகிக்கும்போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் டீலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மீறலும் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற கொள்கலனில் பெட்ரோலை சேமிப்பது அபாயம்: மத்திய அரசு எச்சரிக்கை
எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in