

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
18-வது மக்களவையின் 6-வது கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் மக்களவை 15 அமர்வுகளை நடத்தியது. மொத்தம் 92 மணி நேரம் 25 நிமிடங்கள் அவை செயல்பட்டது. இதன் மூலம் 111 சதவீத அலுவல்கள் திறனை எட்டியது. இந்தக் கூட்டத்தொடரில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தொடரில் 300 நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, அவற்றில் 72 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.