

சண்டிகர்: நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் அளித்த பதிலில், “நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் தயாரிப்புப் பணி நடைபெறுகிறது. இந்த ரயில் தயாரான பிறகு சோதனை முறையில் இயக்கப்படும்” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஹரியானா அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "வடக்கு ரயில்வேயின் லட்சிய திட்டமான ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் தயாரிப்புப் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே சோதனை முறையில் இயக்கப்படும். ஹைட்ரஜன் ரயிலுக்காக ஜிந்த் நகரில் நிறுவப்பட்டுள்ள ஹைட்ரஜன் ஆலைக்கு 11 கேவி சீரான மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.