

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறது.
இதில் இணைந்துள்ள சமூக சேவகர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இவரது உடல் எடை இதுவரை மொத்தம் 9.5 கிலோ குறைந்து தற்போது 56.55 கிலோவாக உள்ளது.
அவரது உடல்நிலை சிக்கலான நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ளது. அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதில் சோனம் வாங்சுக் உறுதியாக உள்ளார்.