பலவீனமாக இருந்தாலும் உறுதியாக இருக்கிறேன்: 17-வது நாள் உண்ணாவிரதத்தில் சோனம் வாங்சுக் பேச்சு

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

Updated on
1 min read

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி​, சமூக ஆர்​வலர் சோனம் வாங்​ சுக் டெல்லி ஜந்​தர் மந்​தரில் மேற்கொண்டு வரும் தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் 17-வது நாளை எட்​டி​யுள்​ளது.

அவரது உடல்​நிலை மிக மோசமடைந்​துள்ள நிலை​யில், “நான் உடல் அளவில் வெளியே பலவீன​மாக இருந்​தா​லும், மனதள​வில் மிக​வும் உறு​தி​யாக இருக்​கிறேன்” என்று சோனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போராட்​டக்​ குழு​வினர் கூறும்போது, “சோனம் வாங்சுக் இது​வரை 8.25 கிலோ உடல் எடையை இழந்​துள்​ளார். தொடர்ச்​சி​யான தலைச்​சுற்​றல், கடுமை​யான தசை இழப்பு மற்றும் உடல் பலவீனம் ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வளவு ஆபத்​தான நிலை​யிலும், மத்​திய அரசு தரப்​பிலிருந்து இது​வரை எவரும் வந்து பேச்​சு​வார்த்தை நடத்த முன்​ வர​வில்​லை” என்றனர்.

<div class="paragraphs"><p><em>சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்</em></p></div>
“புதிய மொழி கற்பது வீணாகாது” - சிபிஎஸ்இ-யின் மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in