நிச்சயதார்த்தம் முடிந்த பின் காதலனுடன் பதிவு திருமணம் செய்த சியா - புதிய தகவல்கள் அம்பலம்

கேத்​தன் அகர்​வால்​ | சியா கோயல் | சேத்​தன் சவுத்​ரி​ |

கேத்​தன் அகர்​வால்​ | சியா கோயல் | சேத்​தன் சவுத்​ரி​ |

Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்​தவர் ரியல் எஸ்டேட் அதிபர் கேத்​தன் அகர்​வால்​ (25). இவருக்​கும் சியா கோயல் என்​பவருக்​கும் கடந்த பிப்​ர​வரி மாதம் குடும்​பத்​தின​ரால் நிச்​சய​தார்த்​தம் செய்​யப்​பட்​டு, வரும் நவம்​பர் மாதம் உதய்​பூரில் பிர​மாண்​ட​மாக திரு​மணம் நடக்​க​விருந்​தது.

இதனிடையே கேத்​தன் அகர்​வால் கொலை செய்​யப்​பட்டு சியா கோயலும், அவரது காதலர் சேத்​தனும் கைது செய்​யப்​பட்​டனர். இதனிடையே, சியா கோயல் தனது கல்​லூரி காதல​னான சேத்​தன் சவுத்​ரியை 4 மாதங்​களுக்கு முன்பே பதிவுத் திரு​மணம் செய்​து​கொண்​ட​தாக தற்​போது போலீஸ் விசா​ரணை​யில் அம்பலாகியுள்ளது.

இந்​தத் திரு​மணத்​தில் சாட்​சிகளாக கையெழுத்​திட்ட சியா​வின் 2 கல்​லூரி தோழிகளிட​மும் தற்​போது புனே மாவட்ட ஊரகப் போலீஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்​தத் திரு​மணம் நடந்​த​போது எடுக்​கப்​பட்ட புகைப்​படங்​கள் அழிக்கப்பட்டுள்​ளன. எனவே, அதை இன்​ஸ்​டாகி​ராம் கணக்கிலிருந்து எடுப்​ப​தற்​கான முயற்​சி​யிலும் போலீ​ஸார் ஈடுபட்​டுள்​ளனர்.

கேத்​தன், சியா இடையே நிச்​சய​தார்த்​தம் நடந்த பின்​னர் 4 மாதங்கள் கழித்து இந்த பதிவுத் திரு​மணம் நடந்​துள்​ளது. திருமண ஏற்​பாடு​களுக்​காக கேத்​தனின் குடும்​பத்​தினர், சியாவின் ஆதார் கார்டு உள்​ளிட்ட சான்​றிதழ்​களைக் கேட்டுள்ளனர். இதனால் தங்​களின் ரகசிய திரு​மணம் அம்பலமாகி​விடும் என்று பயந்​து​போன சியா கோயலும் சேத்​தன் சவுத்​ரி​யும், கேத்​தனை கொலை செய்ய முடிவு செய்​துள்​ளனர்.

கடந்த மே மாதமே சியா கோயல் தனது தோழி ஒரு​வருக்கு ஸ்னாப்​சாட் செயலி மூலம் “உதய்​பூர் திருமண டிக்கெட்டுகளுக்காக ஆதார் கார்டை அனுப்​பு. எப்​படி இருந்​தா​லும் இந்​தத் திருமணம் நடக்​கப் போவ​தில்​லை” என்று முன்​கூட்​டியே செய்தி அனுப்பி இருப்​பதும் போலீஸ் விசா​ரணை​யில் கண்டுபிடிக்கப்பட்டுள்​ளது.

கடந்த ஜூன் 18ம் தேதி சியா கோயல், திட்​ட​மிட்​டபடி கேத்​தனை புனே​யில் உள்ள பிரபல​மான லோஹாகர் கோட்​டைக்கு டிரெக்​கிங் அழைத்​துச் சென்​றுள்​ளார். இதனிடையே, காதலன் சேத்​தன் சவுத்ரி அவர்​களை ரகசி​ய​மாகப் பின்​ தொடர்ந்து வந்​துள்​ளார். கோட்​டை​யின் உச்​சிக்​குச் சென்​றதும், சியா கீழே உட்​கார்ந்து சேத்​தனுக்கு ரகசி​ய​மாக சிக்​னல் கொடுத்​துள்​ளார்​.

உடனே சேத்​தன், கேத்​தனை 400 அடி ஆழமுள்ள பள்​ளத்​தாக்​கில் தள்​ளி​விட்​டுள்​ளார். முதலில்​ இது விபத்​து என்​று கூறப்​பட்​ட நிலையில்​, போலீ​ஸாரின்​ அதிரடி வி​சா​ரணை​யில்​ இது திட்​ட​மிட்​ட கொலை என்​று உறு​தி​யானது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p><em>கேத்​தன் அகர்​வால்​ | சியா கோயல் | சேத்​தன் சவுத்​ரி​ |</em></p></div>
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஹைதராபாத் டிஎஸ்பி சிறையில் அடைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in