சபரிமலையில் அரவணை பிரசாதத் தட்டுப்பாடு: தேவஸ்தான வாரியம், கேரள அரசு இடையே மோதல்

சபரிமலையில் அரவணை பிரசாதத் தட்டுப்பாடு: தேவஸ்தான வாரியம், கேரள அரசு இடையே மோதல்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பிரசித்தி பெற்ற அரவணை பாயசம் பிர​சாதத்​துக்கு தட்​டுப்​பாடு ஏற்பட்டதால் மாநில அரசுக்​கும் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான வாரியத்​துக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டுள்​ளது.

கேரளா​வில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயில் கன்னி மாதப் பூஜைக்​காக திறக்​கப்​பட்​டது. பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​திய நிலை​யில், போது​மான அரவணை பாயசம் இருப்பு இல்​லாத​தால் விநி​யோகம் கடுமை​யாகக் கட்​டுப்​படுத்​தப்​பட்​டது. இதனால் பக்தர்​கள் நீண்ட நேரம் காத்​திருக்க நேரிட்​டது.

சபரிமலை​யில் கன்னி மாதப் பூஜைக்கு பக்​தர்​கள் கூட்​டம் எதிர்​பார்த்​ததை விட அதி​க​மாக வந்​த​தால், தயாரிக்​கப்​பட்ட 2.6 லட்​சம் அரவணை பாயச டின்​கள் விரை​வாகத் தீர்ந்​து, நேற்று 14,000 டின்களுக்​கும் குறை​வான இருப்பு மட்​டுமே மிஞ்​சி​யது. பிர​சாதத் தட்​டுப்​பாட்​டைக் கட்​டுப்​படுத்த, ஒவ்​வொரு பக்​தருக்​கும் ஒரு டின் அரவணை பாயசம் மற்​றும் மூன்று பாக்​கெட் அப்​பம் மட்​டுமே வழங்​கப்​பட்​டதுடன், கவுன்ட்​டர்​களும் தற்​காலிக​மாக மூடப்பட்டன.

ஆலை​யில் பழுது​பார்ப்​புப் பணி​கள் நடப்​ப​தால் உற்​பத்தி நிறுத்தப்​பட்​டதே தட்​டுப்​பாட்​டுக்​குக் காரணம் என்று வாரி​யம் கூறுகிறது. ஆனால், கோயில் நடை திறந்​திருக்​கும் முக்​கிய நாட்களில் ஆலையை மூடி​விட்டு பராமரிப்​புப் பணி செய்​ததைக் குறிப்​பிட்டு தேவஸ்​தான அமைச்​சர் கே.​முரளீதரன் அதிகாரிகளைக் கடுமை​யாகக் கண்​டித்​துள்​ளார்.

இதுபற்றி தங்​களுக்கு முன்​னரே தகவல் தெரிவிக்​காத அதிகாரிகள் மீது உயர் நீதி​மன்​றத்​தில் நடவடிக்கை எடுப்​பது குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக​வும் அவர் கூறி​னார்.

இதற்​கிடையே, வரும் மண்​டல-மகர​விளக்கு சீசனின்​போது இதே​போன்ற பெரிய நெருக்​கடி ஏற்​படு​வதைத் தவிர்ப்​ப​தற்​காகவே தற்​போது அவசர​மாக ஆலையை நவீனப்​படுத்​தும் பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​வ​தாக திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான வாரி​யம் விளக்கம் அளித்​துள்​ளது.

எனினும், திட்​ட​மிடல் இல்​லாத இந்த திடீர் முடக்​கம் காரண​மாக சுமார் 3.2 லட்​சம் அலகு​கள் மட்​டுமே தயாரிக்​கப்​பட்​டு, வாரியத்துக்கு பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக தேவஸ்​தான ஊழியர் சங்​கங்​கள் அதிருப்தி தெரி​வித்​துள்​ளன. இந்தப் பிரச்​சினை குறித்து முதல்​வர் வி.டி. சதீசன் உடன் விரிவான ஆலோ​சனை​களை நடத்​தி, சபரிமலை நிர்​வாகப் பணிகளை​யும் பிர​சாத விநி​யோகத்​தை​யும் கண்​காணிக்​கத் தனியாக ஒரு சிறப்​புக்​குழுவை உரு​வாக்​கு​வது குறித்​தும்​ அரசு பரிசீலித்​து வருகிறது.

சபரிமலையில் அரவணை பிரசாதத் தட்டுப்பாடு: தேவஸ்தான வாரியம், கேரள அரசு இடையே மோதல்
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in