டிச.16-ல் வங்கதேசம் திரும்ப ஷேக் ஹசீனா திட்டம்

டிச.16-ல் வங்கதேசம் திரும்ப ஷேக் ஹசீனா திட்டம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: வங்​கதேசத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர் அமைப்​பு​கள் நடத்திய போராட்​டம் தீவிரமடைந்​தது இதனால் 2024 ஆகஸ்ட் 5-ம் தேதி அப்​போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்​தி​யாவில் தஞ்​சமடைந்​தார்.

ஷேக் ஹசீனா ஆட்​சிக் காலத்​தில் வங்​கதேசத்​தின் பொருளாதாரம் வலு​வாக இருந்​தது. குறிப்​பாக அந்த நாட்​டின் ஜவுளி ஏற்​றுமதி செழித்​தோங்கி வளர்ந்​தது. ஆனால் முகமது யூனுஸ் மற்​றும் தற்​போதைய பிரதமர் தாரிக் ரஹ்​மான் ஆட்​சி​யில் அந்த நாட்​டின் பொருளாதா​ரம் கடுமையாகப் பாதிக்​கப்​பட்டு உள்ளது. வங்​கதேசம் முழு​வதும் சுமார் 1,000-க்​கும் மேற்​பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்​பட்டு உள்​ளன. லட்​சக்​கணக்​கான தொழிலா​ளர்​கள் வேலை இழந்​துள்​ளனர்.

இதை எதிர்த்து கடந்த சில வாரங்​களாக வங்​கதேச ஜவுளி தொழிலா​ளர்​கள் தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வருகின்றனர். அவர்​களுக்​கும் பாது​காப்​புப் படை வீரர்​களுக்​கும் இடையே மோதல்​கள் ஏற்​பட்டு பெரும் கல​வரம் வெடித்திருக்கிறது. இந்த கல​வரத்​தின் பின்​னணி​யில் ஷேக் ஹசீனா இருப்​ப​தாக வங்​கதேச அரசு பகிரங்​க​மாக குற்​றம் சாட்டி உள்​ளது.

இந்த சூழலில் பிரிட்​டிஷ் தலைநகர் லண்​டனில் வசிக்​கும் ஹசீனாவின் செய்​தித் தொடர்​பாளர் சையது முகமது அலி தனியார் செய்தி நிறு​வனத்​துக்கு நேற்று அளித்த பேட்​டி​யில், “2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வங்​கதேச அரசுக்கு சொந்​த​மான விமானத்​தில் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வுக்கு சென்​றார். வரும் டிசம்​பர் 16-ம் தேதி அவர் மீண்​டும் வங்​கதேசத்​துக்கு திரும்ப விரும்​பு​கிறார். அவரது போக்​கு​வரத்​துக்கு வங்​கதேச அரசு ஏற்​பாடு செய்ய வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

வங்கதேச அரசு எச்சரிக்கை

வங்​கதேச வெளி​யுறவு அமைச்​சர் ஹிமாயூன் கபீர், டாக்​கா​வில் நேற்று கூறும்​போது, “கடந்த 2024-ம் ஆண்டு கல​வர வழக்​கில் ஷேக் ஹசீனா​வுக்கு வங்​கதேச நீதி​மன்​றம் மரண தண்​டனை விதித்​துள்​ளது. அவர் ஒரு குற்​றவாளி. குற்​றவாளி​கள் ஒப்​படைப்பு நடைமுறை​யின் மூலம் மட்​டுமே அவர் வங்​கதேசத்​துக்கு திரும்ப முடியும். அவரை கைது செய்து கைவிலங்​கிட்டு அழைத்து வர ஏற்பாடு செய்​வோம்” என்று தெரி​வித்​தார்.

டிச.16-ல் வங்கதேசம் திரும்ப ஷேக் ஹசீனா திட்டம்
திருக்குறள் அடிப்படையில் வாழ்க்கை நடத்தினால் உன்னதம்: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கருத்து

X