ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரம்: காங்​. மூத்த தலை​வர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் ஆதரவு

ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரம்: காங்​. மூத்த தலை​வர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் ஆதரவு
Updated on
1 min read

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் அமைப்பை பாராட்​டிய விவ​காரத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் திக் விஜய் சிங்​குக்கு சசி தரூர் எம்.பி. ஆதரவு தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய பிரதேசத்தை சேர்ந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் திக்​விஜய் சிங் சமூக வலை​தளத்​தில் பிரதமர் மோடி​யின் பழைய புகைப்​படத்தை பதி​விட்டு ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் ஒழுக்​கம், கட்டுப்​பாட்டை புகழ்ந்​தார். அதோடு காங்​கிரஸின் கட்​டமைப்​பு​களை வலுப்​படுத்த ராகுல் கவனம் செலுத்த வேண்​டும் என்​றும் அவர் குறிப்​பிட்​டார்.

இந்த சூழலில் காங்​கிரஸ் கட்​சி​யின் 140-வது நிறுவன தினம் டெல்​லி​யில் நேற்று கொண்​டாடப்​பட்​டது. அப்​போது திக்​விஜய் சிங்​கின் அருகே திரு​வனந்​த​புரம் காங்​கிரஸ் எம்.பி. சசி தரூர் அமர்ந்​தார். விழா நிறைவடைந்து சசி தரூர் வெளியே வந்​த​போது, நிருபர்​கள் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு சசி தரூர் கூறிய​தாவது: நானும் திக் ​விஜய் சிங்​கும் மிக நெருங்​கிய நண்​பர்​கள். நாங்​கள் அடிக்​கடி சந்​தித்​துப் பேசுவோம். இன்​றைய விழா​விலும் எங்​களது நட்பு வெளிப்​பட்​டது. காங்கிரஸை வலுப்​படுத்த வேண்​டும் என்று திக்​ விஜய் சிங் கூறியிருக்​கிறார். அவர் கூறிய கருத்துகளில் தவறில்லை.

(ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டியது) அவரது கருத்தை ஆதரிக்​கிறேன். 140-வது நிறுவன தின விழாவை கொண்​டாடி உள்​ளோம். இந்த நேரத்​தில் கடந்த கால நிகழ்​வு​களை நினை​வு​கூர்ந்து செயல்பட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சசி தரூர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ”ஆங்​கிலேயர்​களுக்கு எதி​ரான சுதந்​திர போராட்​டத்​தில் காங்​கிரஸ் முக்​கிய பங்கு வகித்​தது. கடந்த 1885-ம் ஆண்​டில் காங்​கிரஸின் முதல் மாநாடு நடை​பெற்​றது. அப்​போது ​முதல் இப்​போது வரை நாட்​டின் ஜனநாயகத்தை பாது​காக்க காங்​கிரஸ் உறு​துணை​யாக செயல்​படு​கிறது” என்று தெரி​வித்​தார்.

காங்​கிரஸ் தலை​வர் கார்கே உள்​ளிட்​டோர், திக்​ விஜய் சிங்கை கண்​டிக்​கும் வகை​யில் கருத்​துகளை தெரி​வித்து வரு​கின்​றனர். எனினும் சசி தரூர், சச்​சின் பைலட் உள்​ளிட்​டோர் திக்​ விஜய் சிங்கின் கருத்தை ஆதரித்து பேசி வரு​கின்​றனர். சச்​சின் பைலட் கூறும்​போது, “காங்​கிரஸ் கட்​சி​யில் ஒவ்​வொரு​வரும் தங்​கள் கருத்துகளை எடுத்​துரைக்​க முழு உரிமை இருக்​கிறது” என்​று தெரிவித்தார்​.

ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரம்: காங்​. மூத்த தலை​வர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் ஆதரவு
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in