டெல்லியில் பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை

டெல்லியில் பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை
Updated on: 
1 min read

புதுடெல்லி: டெல்லியில் சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

தென்கிழக்கு டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் அருகே அமைந்துள்ள ஆஸ்தா கஞ்ச் பூங்காவில், செப்டம்பர் 21-ம் தேதி, காவல் துறையினர் போல் நடித்த மூன்று நபர்களால் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இது தொடர்பாக, நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, கே. வினோத் சந்திரன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து வழக்கைக் கையிலெடுத்ததோடு, அதனை விசாரணைக்குப் பட்டியலிடுமாறும் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் டெல்லியில் 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி யுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் அதிகரித்து வரும் இத்தகைய சம்பவங்கள், அடிப்படைப் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகமும் அமைப்பும் தோல்வியடைந்திருப்பதைத் தெளிவாகக் காட்டுவதாகக் குறிப்பிட்டனர்.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை
எல் நினோ தாக்கம் எதிரொலி: இந்திய அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் சரிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in