சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்
Updated on
1 min read

ராஜ்நந்கான்: சத்​தீஸ்​கர் மாநிலம் பிஜப்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ராம்​தர் என்ற சோமா. மாவோ​யிஸ்ட் குழு​வில் மத்​திய குழு உறுப்​பின​ராக உள்ள இவர் மீது 61 குற்​றவழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவர் மகா​ராஷ்டிர மாநிலத்​துக்கு பொறுப்​பாள​ராக இருந்​துள்​ளார்.

மாவோயிஸ்ட்கள் மீது பாதுகாப்பு படையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாலும், சரணடையும் மாவோயிஸ்ட்களின் மறுவாழ்வுக்கு உதவுவதாலும் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்​நிலை​யில் மூத்த தலை​வர் ராம்​தர் ராஜ்நந்​கான் மாவட்ட போலீ​ஸாரிடம் சரணடைந்​துள்​ளார். பாது​காப்பு படை​யினரிடம் இருந்து திருடப்​பட்ட ஏ.கே.47 ரக துப்​பாக்​கியை​யும் அவர் ஒப்​படைத்​தார்.

இவருடன் சேர்ந்த மண்டல கமிட்டி உறுப்​பினர் சாந்து உசேந்தி மற்​றும் ஜான்கி உட்பட பலர் சரணடைந்​தனர்​. இவர்களும் திருடப்பட்ட 3 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உட்பட பல துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். சத்திஸ்கர் மாவோயிஸ்ட் அமைப்பில் தற்போது 3 மத்தியக் குழு உறுப்பினர்கள் மற்றும் 2 பொலிட்பீரோ உறுப்பினர்கள் மட்டுமே மீதம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் வேறு மாநிலங்களில் உள்ளனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்
“அரசியலமைப்பும் பகவத் கீதையும் ஒன்றுதான்” - பவன் கல்யாண் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in