பெங்களூரு த‌மிழ்ப் புத்தகத் திருவிழாவில் விஞ்ஞானி டில்லி பாபுவின் ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ நூல் வெளியீடு

பெங்களூரு த‌மிழ்ப் புத்தகத் திருவிழாவில் விஞ்ஞானி டில்லி பாபுவின் ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ நூல் வெளியீடு
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடகத் தமிழ்ப் பத்​திரி​கை​யாளர் சங்​கத்​தின் சார்​பாக பெங்​களூரு​வில் 4-வது ஆண்​டாக தமிழ்ப் புத்​தகத் திரு​விழா நடை​பெற்று வரு​கிற‌து. சிவாஜி நகர் அரு​கிலுள்ள‌ இன்​ஸ்​டிடியூஷன் ஆப் இன்​ஜினீயர்ஸ் வளாகத்​தில் டிசம்​பர் 14-ம் தேதி வரை இவ்​விழா நடைபெறுகிறது.

நேற்று மாலை 6 மணிக்கு ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லி​பாபு எழு​திய ‘வெள்​ளோட்​டம் வெல்​லட்​டும்' நூலை விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை வெளி​யிட, ஆதித்யா எல் 1 திட்ட இயக்​குநர் நிகர் ஷாஜி, நூலின் தொகுப்​பாசிரியர் க.செல்வி ஆகியோர் பெற்​றுக் கொண்​டன‌ர்.

ஏற்​புரை​யில் ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு பேசி​ய​தாவது: அறி​வியல் என்​பது மாணவர்​களுக்கு மட்​டு​மானது அல்ல. அனைத்து மக்​களின் நலனுக்​கு​மானது. ஒவ்​வொன்​றை​யும் ஆராய்ந்து மக்​களுக்கு தேவை​யான கண்​டு​பிடிப்​பு​கள் மலர்​வதற்கு அறி​வியலே காரணம். கடந்த 1950-களில் இந்​தி​யா​வில் பால் தட்​டுப்​பாடு நில​வியது.

அதனால் சுவிட்​சர்​லாந்து போன்ற நாடு​களில் இருந்து பால் பவுடர் இறக்​குமதி செய்​யப்​பட்​டது. இந்​தி​யா​வில் எருமை மாடு​கள் இருந்​தா​லும் அதில் இருந்து பால் பவுடர் தயாரிக்க முடி​யாது என கூறப்​பட்​டது. வர்​கிஸ் குரியன் போன்ற விஞ்​ஞானிகள் வெண்மை புரட்​சி​யின் மூலம் அதனை பொய்​யாக்கி பால் பவுடர் தயாரித்​தனர். உள்​நாட்​டில் பால் உற்​பத்​தியை பெருக்​கி, இன்று உலகிலேயே பால் பொருள் ஏற்​றும​தி​யில் இந்​தி​யாவை முதல் நாடாக மாற்​றி​யுள்​ளார்.

இவ்​வாறு மக்​களின் துயரை அறி​வியலே போக்​கியது. எனவே அறி​வியலை அன்​றாட வாழ்​வில் அனை​வரும் பேசி, அதை மக்​களின் நலனுக்​கான​தாக மாற்ற வேண்​டும். இவ்​வாறு டில்​லி​பாபு தெரி​வித்​தார்.

இந்து தமிழ் திசை நூல்​கள்: பெங்​களூரு புத்தக திரு​விழா​வில் பண்​டிதர் பதிப்பக அரங்​கில் இந்து தமிழ் திசை பதிப்​பகம் வெளி​யிட்​ட நூல்​கள்​ 10 சதவீத தள்ளுபடி விலை​யில்​ விற்​பனை செய்​யப்​படுகின்​றன.

பெங்களூரு த‌மிழ்ப் புத்தகத் திருவிழாவில் விஞ்ஞானி டில்லி பாபுவின் ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ நூல் வெளியீடு
பிரிஸ்பனில் இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்திய ஆஸி: ஆஷஸ் டெஸ்ட் தொடர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in