சிஆர்பிஎப் துணை ராணுவத்தின் அசாம் கோப்ரா படை தலைவராக சஞ்​சுக்தா பராஷர் பொறுப்பேற்பு

சிஆர்பிஎப் துணை ராணுவத்தின் அசாம் கோப்ரா படை தலைவராக சஞ்​சுக்தா பராஷர் பொறுப்பேற்பு
Updated on
1 min read

குவாஹாட்டி: சிஆர்​பிஎப் துணை ராணுவத்​தின் சிறப்பு வன போர்ப்​பிரிவு படைத் தலை​வ​ராக அசாமின் ‘இரும்​புப் பெண்​மணி’ என்று அழைக்​கப்​படும் பெண் ஐபிஎஸ் அதி​காரி சஞ்​சுக்தா பராஷர் பொறுப்​பேற்​றுள்​ளார்.

கடந்த 2006-ம் ஆண்​டில் ஐபிஎஸ் அதி​காரி​யாக பதவி​யேற்​றவர் சஞ்​சுக்​தா. இவர் அசாம் மாநிலத்​தின் இரும்​புப் பெண்​மணி என போற்​றப்​படு​கிறார். அசாம் மாநிலத்​தில் தற்​போது சிறப்பு வனப்​பிரிவு போர்ப்​படை அமைக்​கப்​பட்​டு உள்​ளது.

இந்​தப் படை​யின் தலை​வ​ராக ஐஜி அந்​தஸ்​தில் இருக்​கும் சஞ்​சுக்தா பொறுப்​பேற்றள்​ளார். அசாமில் தீவிர​வாதத் தடுப்​புப் பணி​களில் சிறப்பாக ஈடு​பட்டு அனை​வரின் பாராட்​டு​களைப் பெற்​றவர் சஞ்சுக்​தா. இதைத் தொடர்ந்தே சிறப்பு வன போர்ப்​பிரிவு படைத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ள​தாக சிஆர்​பிஎப் வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இந்த சிறப்​புப் பிரிவுக்கு கோப்ரா (உறுதி நடவடிக்​கைகளுக்​கான கமாண்டோ பிரிவு) என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. அடர்ந்த காடுகளில் நீண்ட தூர தேடு​தல் நடவடிக்​கைகள், மறைந்​திருந்து தாக்​குதல், எதிர் தாக்​குதல் நடவடிக்​கைகள், வெடிகுண்​டு​களை செயலிழக்​கச் செய்​தல், உளவுத்​துறை சார்ந்த நடவடிக்​கைகள், ஆயுதமேந்​திய தீவிர​வா​தி​களுக்கு எதி​ரான துல்​லிய தாக்​குதல்​கள் உள்​ளிட்ட கொரில்​லா, காட்​டுப் போர் முறை​களுக்​காக இந்​தப் பிரி​வில் உள்​ளவர்​கள் சிறப்பு பயிற்சி பெற்​றுள்​ளனர்.

ஐபிஎஸ் அதி​காரி சஞ்​சுக்​தா, ஏற்​கெனவே தேசிய புல​னாய்வு முகமை​யில் (என்​ஐஏ) டிஐஜி​யாக பணி​யாற்​றிய அனுபவம் உடையவர். அசாமில் பணி​யாற்​றிய​போது, பல்​வேறு தீவிர​வாத நடவடிக்​கைகளை தடுத்​திருந்​தார். வனப்​பகு​தி​களில் இவர் நடத்திய தேடு​தல் நடவடிக்​கைகள், ஆயுதம் தாங்​கிய தீவிரவாதிகளுக்கு எதி​ரான இவரது நடவடிக்​கைகளால் அசாமின் இரும்​புப் பெண்​மணி என்று அழைக்​கப்​படு​கிறார்.

சிஆர்பிஎப் துணை ராணுவத்தின் அசாம் கோப்ரா படை தலைவராக சஞ்​சுக்தா பராஷர் பொறுப்பேற்பு
​முல்​லைப் பெரி​யாறு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்ட தமிழகம் எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in