சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை​யின் சார்​பில் சஞ்​சார் சாத்தி என்ற செயலி செயல்​படு​கிறது. திருடு​போன செல்​போனை கண்​டு​பிடிக்​க​வும் இணை​ய​வழி​யில் நடை​பெறும் மோசடியை தடுக்​க​வும் இது உதவு​கிறது.

இந்​நிலை​யில், புதிய செல்​போன்​களில் இந்த செயலியை முன்​கூட்​டியே நிறுவ வேண்​டும் என்​றும் 90 நாட்​களுக்​குள் இதை அமல்​படுத்த வேண்​டும் என்​றும் செல்​போன் தயாரிப்பு நிறு​வனங்​களுக்கு மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி கூறும்​போது, ‘‘சஞ்​சார் சாத்தி ஒட்டு கேட்பு செயலி. இதை கட்​டாய​மாக்​கு​வது அபத்​த​மான செயல். இது பொது​மக்​களின் தனி உரிமையை மீறும் செயல்’’ என்​றார்.

இது​போல காங்​கிரஸ் மூத்த தலை​வர் கே.சி.வேணுகோ​பால், சிவசேனா (உத்​தவ்) மூத்த தலை​வர் பிரியங்கா சதுர்​வேதி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் மத்​திய அரசின் உத்​தர​வுக்கு கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதற்​கெல்​லாம் பதில் அளிக்கும் வகை​யில் மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை அமைச்​சர் ஜோதி​ர் ஆ​தித்ய சிந்​தியா நேற்று கூறிய​தாவது: கடந்த 2024-ல் நம் நாட்​டில் இணை​ய​வழி​யில் கோடிக்​கணக்​கில் மோசடி நடந்​துள்​ளது. இதைத் தடுக்க வேண்​டும் என்று எதிர்க்​கட்​சிகள் வலி​யுறுத்​துகின்​றன. அதே​நேரம், இணை​ய​வழி மோசடியைத் தடுக்க சஞ்​சார் சாத்தி செயலியை வழங்​கி​னால், அது ஒட்டு கேட்பு செயலி என குறை கூறுகின்​றன.

வாடிக்​கை​யாளர் நலன் கரு​தியே புதிய செல்​போன்​களில் சஞ்​சார் சாத்தி செயலியை நிறுவ வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளோம். வாடிக்​கை​யாளர்​கள் இதைப் பயன்​படுத்த வேண்​டியது கட்​டா​யம் அல்ல. வாடிக்​கை​யாளர்​களுக்கு வேண்​டும் என்​றால் அதில் பதிவு செய்து பயன்​படுத்​தலாம். விரும்​ப​வில்லை என்​றால் அந்த செயலி செயலற்ற நிலை​யில் இருக்​கும். அந்த செயலியை நீக்க விரும்​பி​னாலும் நீக்​கி​விடலாம். ஆனால் இணை​ய​வழி மோசடியி​லிருந்து தங்​களை பாது​காத்​துக் கொள்ள ஒரு செயலி உள்​ளது என்​பதை எல்​லோரும் அறிந்​திருக்க மாட்​டார்​கள். எனவே தகவலை பரப்ப வேண்​டியது எங்​கள் பொறுப்​பு. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்
உலகின் முதல் 100 ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் 3 பொதுத் துறை நிறுவனங்களுக்கு இடம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in