சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: தந்திரிக்கு எதிராக சாட்சியமில்லை - நீதிமன்றம் தகவல்

கைதுக்கு விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: தந்திரிக்கு எதிராக சாட்சியமில்லை - நீதிமன்றம் தகவல்
Updated on
1 min read

கொல்லம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் தங்​கம் கொள்ளை தொடர்​பான 2 வழக்​கு​களில் கோயில் தந்​திரி​யான கண்​டரரு ராஜீவரு திரு​வனந்​த​புரம் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இந்நிலையில், ராஜீவருவின் ஜாமீன் மனு மீதான விசா​ரணை கொல்​லம் குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம் அவருக்கு ஜாமீன் வழங்​கியது. விசா​ரணை​யின்போது நீதி​மன்​றத்​தில் தந்​திரி​யின் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி 2018-ல் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பெண்​கள் நுழைந்து தரிசனம் செய்ய கேரள மாநில அரசு அனு​ம​தித்​தது.

இதற்கு அப்​போது கண்​டரரு ராஜீவரு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார்.அதற்கு பழி​வாங்​கும் நடவடிக்​கை​யாக இந்த தங்​கத் திருட்டு வழக்கை கேரள அரசு அதி​காரி​கள் தொடர்ந்​துள்​ளனர்” என்று தெரி​வித்​தார். இந்​நிலை​யில்​தான் ஜாமீனில் ராஜீவரு வெளியே வந்​துள்​ளார்.

மேலும் இந்த வழக்​கில் கண்​டரரு ராஜீவருக்கு எதி​ராக எந்​தச் சாட்​சி​ய​மும் இல்லை என்று கொல்​லம் குற்​ற​வியல் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. இது கேரள அரசி​யலில் பெரும் புயலைக் கிளப்​பி​யுள்​ளது.

கண்​டரரு ராஜீவருவை வேண்​டுமென்றே கேரள போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்​தி​ய​தாக​வும், இது பழி வாங்​கும் நடவடிக்கை என்றும் கேரளா​வில் உள்ள எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டி​யுள்​ளன.

இந்த தங்​கம் திருட்டு வழக்​கில் முன்​னாள் தேவஸ்​வம் போர்டு அமைச்​சர் கடக்​கம்​பள்ளி சுரேந்​திரன் சம்​பந்​தப்​பட்​டுள்​ளார் என்​றும், அதை திசை திருப்​பவே தந்​திரி கண்​டரரு ராஜீவருவை கேரள போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர் என்​றும் பாஜக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சுமத்​தி​யுள்​ளன. கண்​டரரு ராஜீவருவை கைது செய்​தது தொடர்​பாக கேரள அரசு விளக்​கம் அளிக்க வேண்​டும்​ என்​றும்​ அக்​கட்​சிகள்​ போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளன.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: தந்திரிக்கு எதிராக சாட்சியமில்லை - நீதிமன்றம் தகவல்
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரி விவகாரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in