மத்திய பட்ஜெட்டில் ரூ.12.2 லட்சம் கோடி உள்கட்டமைப்பு துறைக்கு அறிவிப்பு!

நிதி​யமைச்​சர் நிர்மலா சீதாராமன்

நிதி​யமைச்​சர் நிர்மலா சீதாராமன்

Updated on
1 min read

நடப்பு நிதி​யாண்​டில் உள்கட்டமைப்பு துறை ஒதுக்​கீடு ரூ.11.2 லட்​சம் கோடி​யாக இருந்த நிலை​யில், தற்​போது இது மேலும் ஒரு லட்​சம் கோடி ரூபாய் கூடு​தலாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து நாடாளு​மன்​றத்​தில் நிதி​யமைச்​சர் கூறுகை​யில், ‘‘கடந்த 2014-15 நிதி​யாண்​டில் ரூ.2 லட்​சம் கோடி​யாக இருந்த பொது மூலதனச் செல​வினம், பலமடங்கு உயர்ந்து நடப்பு 2025-26 பட்​ஜெட் மதிப்​பீட்​டில் ரூ.11.2 லட்​சம் கோடியை எட்​டியது. இந்த வளர்ச்​சியை தொடர​வும், உள்​கட்​டமைப்பு பணி​களை மேலும் விரைவுபடுத்​த​வும் 2026-27 நிதி​யாண்​டில் இதற்​கான ஒதுக்​கீடு ரூ.12.2 லட்​சம் கோடி​யாக உயர்த்​தப்​படு​கிறது.

மத்​திய பொதுத்​துறை நிறு​வனங்​களின் வசமுள்ள நிலம் மற்​றும் சொத்​துகளை விற்று நிதி திரட்​டு​வதை ஊக்​குவிக்​கும் வகை​யில், பிரத்​யேக ரியல் எஸ்​டேட் முதலீட்டு அறக்​கட்​டளை​கள் நிறு​வப்​படும். மேலும், உள்​கட்​டமைப்பு திட்​டங்​களுக்கு கடன் வழங்​கும் நிறு​வனங்​களுக்​குப் பாது​காப்​பளிக்​கும் வகை​யில், உள்​கட்​டமைப்பு அபாய உத்​தர​வாத நிதி​யம் உரு​வாக்​கப்​படும்" என்​றார்.

<div class="paragraphs"><p>நிதி​யமைச்​சர் நிர்மலா சீதாராமன்</p></div>
மத்திய பட்ஜெட்டில் சுகாதார அமைச்சக நிதி ஒதுக்கீடு 10 சதவீதம் அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in