லஞ்சப் பணத்தில் வாங்கிய ரூ.18 கோடி சொத்து பறிமுதல் - தெலங்கானா அரசு அதிகாரி கைது

கைது செய்யப்பட்ட மோகன் நாயக் ஜருப்​லா

கைது செய்யப்பட்ட மோகன் நாயக் ஜருப்​லா

Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலத்​தின் சாலை மற்​றும் கட்டிடத் துறை அதி​காரி மோகன் நாயக் ஜருப்​லா. இவர் லஞ்​சம் வாங்​கு​வ​தாக பல புகார்​கள் வந்​தன.

அதன்​பேரில், லஞ்ச ஒழிப்​புத்​ துறை அதி​காரி​கள் மோகன் நாயக்கின் வீடு, அலு​வல​கம் மற்​றும் அவருக்கு தொடர்​புடைய 15-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அதிரடி சோதனை நடத்​தினர்.

அப்​போது அவர் சட்​டத்​திற்கு புறம்​பாக ரூ.82.09 லட்​சம் மதிப்​புள்ள 19.38 ஏக்​கர் விவ​சாய நிலம், ரூ.7.35 கோடி மதிப்​புள்ள 7 வீடு​கள், வங்கி டெபாசிட் ரூ.1.44 கோடி, ரூ.55 லட்​சம் ரொக்​கம், ரூ.2 கோடி மதிப்​புள்ள 2.5 கிலோ தங்க நகைகள், ரூ.3.6 லட்​சம் மதிப்​புள்ள 6 கிலோ வெள்ளி பொருட்​கள், ரூ.1.26 கோடி மதிப்​புள்ள வீட்டு உபயோக பொருட்​கள், ரூ.11.25 லட்​சம் மதிப்​புள்ள 9 விலை உயர்ந்த மொபைல் போன்​கள், 4 லேப்​ டாப்​கள், ரூ.25 லட்​சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இவற்​றின் சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்​கும் அதி​க​மாகவே இருக்கும் என லஞ்ச ஒழிப்​புத் ​துறை அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர். மேலும் சில இடங்​களில் தொடர்ந்து சோதனைகள் நடத்​தப்​பட்​டு வரு​கின்றன.

<div class="paragraphs"><p><em>கைது செய்யப்பட்ட மோகன் நாயக் ஜருப்​லா</em></p></div>
பாஜக பெண் நிர்வாகி குறித்து விமர்சனம்: யூடியூபர் முக்தார் அகமது கர்நாடகாவில் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in