டெல்லி ஓட்டல் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் லவ்கேஷ்

கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் லவ்கேஷ்

Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லி ஓட்​டல் தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு தலா ரூ.10 லட்​சம், பலத்த தீக்​கா​யம் அடைந்​தவர்​களுக்கு தலா ரூ.5 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும் என்று டெல்லி முதல்​வர் ரேகா குப்தா அறி​வித்​துள்​ளார்.

டெல்லி மாள​வியா நகரில் உள்ள மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறு​வதற்​காக ஆண்​டு​தோறும் சுமார் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வெளி​நாட்​டினர் வருகை தரு​கின்​றனர். அவர்​களோடு வரும் உறவினர்​கள் அப்பகுதியில் உள்ள ஓட்​டல்​களில் தங்​கு​கின்​றனர். இந்த சூழலில் மாள​வியா நகரில் உள்ள ‘ஃபிளரிஷ் ஸ்டே’ ஓட்​டலில் நேற்று முன்​தினம் காலை தரை கீழ்​தளத்​தில் உள்ள சமையல் அறை​யில் தீ ஏற்​பட்​டது. இதில் தரை கீழ் தளம், தரைத்​தளம் முழு​மை​யாக தீயில் எரிந்து நாச​மானது. அரு​கில் உள்ள "மி​காசா இன்" ஓட்​டலுக்​கும் தீ பரவியது.

இந்த தீ விபத்​தில் 21 பேர் உடல் கருகி உயி​ரிழந்​தனர். இதில் 12 பேர் ஆப்​பிரிக்க நாடு​கள், வங்​கதேசம், துர்க்​மெனிஸ்​தானை சேர்ந்​தவர்​கள் ஆவர். 40-க்​கும் மேற்​பட்​டோர் தீக்​கா​யம் அடைந்தனர். இதில் பெரும்​பாலானோர் வெளி​நாட்​டினர் ஆவர். இதில் உயி​ரிழந்​தவர்​களுக்கு மத்​திய அரசு சார்​பில் தலா ரூ.2 லட்சம், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000 நிதி​யுதவி வழங்கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் அறி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “தீ விபத்​தில் உயிரிழந்தவர்களின் குடும்​பங்​களுக்கு டெல்லி அரசு சார்​பில் தலா ரூ.10 லட்​சம், பலத்த தீக்​கா​யம் அடைந்​தவர்​களுக்கு தலா ரூ.5 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும்” என்று அறி​வித்​தார்.

தீ விபத்து குறித்து உயர்​நிலை விசா​ரணை நடத்த டெல்லி அரசு உத்​தர​விட்டு உள்​ளது. குறிப்​பாக ஓட்​டல்​களுக்கு உரிமம் வழங்​கிய அதி​காரி​கள், தீயணைப்​புத் துறை சான்​றிதழ் வழங்​கிய அதிகாரிகள் விசா​ரணை வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்டு உள்​ளனர். தலைமறை​வாக இருந்த ‘ஃபிளரிஷ் ஸ்டே’ ஓட்​டல் உரிமை​யாளர் லவ்​கேஷ் பஜாஜ் கைது செய்​யப்​பட்டு நேற்று நீதிமன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அவரை 4 நாட்​கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

45 பேரை காப்பாற்றிய மக்கள்: ‘ஃபிளரிஷ் ஸ்டே’, ‘மி​காசா இன்’ ஓட்​டல்​கள் தலா 5 மாடிகளை கொண்​ட​வை. இவற்​றில் சுமார் 150-க்​கும் மேற்​பட்​டோர் தங்​கி​யிருந்​தனர். இந்த ஓட்​டல்​களில் தீ விபத்து ஏற்​பட்​டதும் உள்​ளூர் மக்​கள் ஓடோடி வந்து மீட்​புப் பணியில் ஈடு​பட்​டனர். அப்​போது மாடிகளில் தங்​கி​யிருந்​தவர்​கள் ஜன்​னல்​கள் வழி​யாக கூக்​குரலிட்​டனர்.

ஓட்​டல்​களின் முன்பு தரை ​விரிப்​பு, போர்​வை​களை விற்​பனை செய்​யும் கடைகள் உள்​ளன. அந்த கடைகளின் உரிமை​யாளர்​கள் பெரிய தரை​ விரிப்​பு, போர்​வை​களை கொண்டு வந்​தனர். அவற்றை உள்​ளூர் மக்​கள் வட்ட வடி​வில் கெட்​டி​யாகப் பிடித்து நின்​றனர். தீ பரவுவதற்கு முன்​பாக ஓட்​டல்​களின் மாடிகளில் தங்கி​யிருந்​தவர்​கள் ஜன்​னல்​கள் வழி​யாக போர்​வை, தரை​ விரிப்பு​கள் மீது ஒவ்​வொரு​வ​ராக குதித்​தனர். இதன் ​மூலம் சுமார் 45-க்​கும் மேற்​பட்​டோர் பாது​காப்​பாக மீட்​கப்​பட்​டனர்.

மீட்​புப் பணி​களில் ஈடு​பட்ட வாசீம் ராஜா உள்​ளூர் மருத்துவமனை​யில் பணி​யாற்​றுகிறார். அவர் தீக்​கா​யம் அடைந்தவர்​களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனை​களுக்கு அனுப்பி வைத்​தார். முகமது அப்​சல், அர்மான் கான், ரியாசுதீன் மன்​சூரி உள்​ளிட்​டோர் முன்வரிசையில் நின்று மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர். அவர்களை டெல்லி போலீ​ஸார் பா​ராட்​டி கவுர​வித்​தனர்​.

<div class="paragraphs"><p><em>கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் லவ்கேஷ்</em></p></div>
பள்ளிக்கரணையில் திடீர் தீ விபத்து: மாநகராட்சி நிறுத்தியிருந்த பழைய வாகனங்கள் எரிந்து சேதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in