பள்ளிக்கரணையில் திடீர் தீ விபத்து: மாநகராட்சி நிறுத்தியிருந்த பழைய வாகனங்கள் எரிந்து சேதம்

| படம்: எல்.சீனிவாசன் |

| படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: பள்ளிக்கரணையில் ஏற்​பட்ட திடீர் தீ விபத்​தில், மாநக​ராட்சி சார்​பில் சாலை​யோரம் அகற்​றப்​பட்​டு, நிறுத்​தப்​பட்​டிருந்த பழைய வாக​னங்​கள் எரிந்து சேதமடைந்தன.

பள்​ளிக்​கரணை சுற்​றுச்​சூழல் பூங்கா எதிரே உள்ள மயிலை பாலாஜி நகரை ஒட்​டிய பகு​தி​யில் பழைய குப்பை கிடங்கு உள்​ளது.

இங்கு சாலை​யோரங்​களில் கைவிடப்​பட்ட நிலை​யில், போக்​கு​வரத்​துக்​கும், பாதசா​ரி​களுக்​கும் இடையூறாக இருந்த வாக​னங்​கள் மாநக​ராட்சி மற்​றும் மாநகர காவல்​துறை சார்​பில் அகற்​றப்​பட்​டு, பள்​ளிக்​கரணை பழைய குப்பை கிடங்கு பகு​தி​யில் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.

அங்கு சுமார் 200-க்​கும் மேற்​பட்ட இருசக்கர மற்​றும் 4 சக்கர வாக​னங்​கள் நிறுத்​தப்​பட்​டிருந்​தன. இதே பகு​தி​யில், மாநக​ராட்சி சார்​பில் பிளாஸ்​டிக் கழி​வு​கள் சேகரிக்​கப்​பட்​டு, அவை மூட்​டை​யாக சுற்றி வைக்​கும் கூட​மும் செயல்​பட்டு வரு​கிறது.

அந்த பிளாஸ்​டிக் மூட்​டைகள், சிமென்ட் தொழிற்​சாலை​யில் எரிபொருளாக பயன்​படுத்த அனுப்​பப்​பட்டு வரு​கிறது. இப்​பகு​தி​யில் இருந்த பிளாஸ்​டிக் கழி​வு​களில் நேற்று காலை தீப்​பிடித்​தது.

இந்த தீ, அரு​கில் நிறுத்​தப்​பட்​டிருந்த பழைய வாக​னங்​கள் மீதும் பரவி, கரும்​புகை வெளி​யேறி, அப்​பகு​தியை சுற்றி காற்​றில் பரவியது இதனால், அப்​பகு​தி​யில் வசிப்​பவர்​கள் மிகுந்த சிரமத்​துக்​குள்​ளா​யினர்.

பின்​னர், தகவல் அறிந்து மாநக​ராட்​சி, காவல்​துறை, தீயணைப்பு துறை, சென்னை குடிநீர் வாரிய அதி​காரி​கள் உள்​ளிட்​டோர் விரைந்து வந்து தீயை போராடி தீயை அணைத்​தனர். தீயை அணைக்​கும் பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேரில் பார்​வை​யிட்​டார்.

பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிளாஸ்​டிக் கழி​வு​கள் வகை பிரிக்​கும் இடத்​தில், சுமார் 100 டன் பிளாஸ்​டிக் கழி​வு​கள் சேகரித்து வைக்​கப்​பட்​டிருந்​தன. இப்​பகு​தியி​லிருந்து தீ பிடித்​துள்​ளது. இது தொடர்​பாக விரி​வான விசா​ரணை நடத்​தப்​படும்.

தீயை அணைக்​கும் பணி​யில் 9 தீயணைப்பு நீர் தெளிப்பு வாக​னங்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டன. மேலும், தீயை அணைக்க சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில் 30 தண்​ணீர் டேங்​கர் லோடு​கள் கொண்டு வரப்​பட்​டு, தீ அணைக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

தீ விபத்து ஏற்​பட்ட பகு​தி​யில், சோழிங்​கநல்​லூர் தொகுதி எம்​எல்ஏ பி.சர​வண​மூர்த்​தி, மாநக​ராட்சி துணை மேயர் மு.மகேஷ்கு​மார், இணை ஆணை​யர் (சு​கா​தா​ரம்) வீ.ப.ஜெயசீலன், தெற்கு வட்​டார துணை ஆணை​யர் அஃதாப் ரசூல் உள்​ளிட்​டோர் நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தனர்.

தீ விபத்து ஏற்​பட்ட பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த சுமார் 200-க்​கும் மேற்​பட்ட வாக​னங்​களில், சுமார் 50-க்​கும்​ மேற்​பட்​ட வாக​னங்​கள்​ எரிந்​து சேதமடைந்தன.

<div class="paragraphs"><p>| படம்: எல்.சீனிவாசன் |</p></div>
டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in