உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!

உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!
Updated on
1 min read

புதுடெல்லி: அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பணியாற்றும் ஊழியர்​களின் ஓய்​வுக் காலத்​துக்​காக வருங்​கால வைப்பு நிதி (பிஎப்) திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. இது, மத்​திய அரசால் நிர்​வகிக்​கப்​படும் ஓய்​வூ​திய மற்​றும் சேமிப்பு திட்​டம் ஆகும்.

கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நில​வரப்​படி நாடு முழு​வதும் 31.83 லட்​சம் பிஎப் கணக்​கு​களில் ரூ.10,181 கோடி உரிமை கோரப்​ப​டா​மல் இருந்​தது. மத்​திய அரசு தற்​போது ‘‘உங்​கள் பணம், உங்​கள் உரிமை’’ என்ற இயக்​கத்தை நடத்தி வரு​கிறது. இதன்​படி உரிமை கோரப்​ப​டாத பிஎப். தொகை, வங்கி கணக்கு டெபாசிட், காப்​பீட்டு தொகை, ஈவுத் தொகை, பிற நிதி சொத்​துகள் உரியவர்களிடம் அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதன்​படி கடந்த ஓராண்​டில் பல்​வேறு பிஎப் கணக்​கு​களில் முடங்கி இருந்த ரூ.851 கோடி உரிய​வர்​களிடம் அளிக்​கப்​பட்​டது. தற்​போதைய புள்​ளி​ விவரங்​களின்​படி நாடு முழு​வதும் சுமார் 31 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பிஎப் கணக்​கு​களில் ரூ.9,330 கோடி முடங்கியுள்ளது.

இந்த தொகையை உரிய​வர்​களிடம் திருப்பி அளிக்க அதிதீ​விர முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. பிஎப் கணக்குகளில் முடங்​கி​யிருக்​கும் ரூ.9,330 கோடி நிதி மூலம் 3 ஐஐடி கல்வி நிறு​வனங்​களை உரு​வாக்க முடி​யும். பல்​வேறு மக்கள் நலத்​திட்​டங்​களை நிறைவேற்ற முடி​யும் என்று பொருளாதார நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளைகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in