

கோப்புப் படம்
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 'மின்னணுப் பறிமுதல் மேலாண்மை அமைப்பு' (ESMS) பிப்ரவரி 26-ம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, ரூ.17.44 கோடி ரொக்கம், ரூ.37.68 கோடி மதுபானங்கள் (16.3 லட்சம் லிட்டர்கள்), ரூ.167.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.23 கோடி மதிப்புள்ள விலைமதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் ரூ.163.30 கோடிக்கு அதிகமான பிற பொருட்கள் என ரூ.408.82 கோடி மதிப்புள்ள சட்டவிரோதப் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.