நேர்மைக்கு கிடைத்த பரிசு: ஆந்திராவில் 18 ஆண்டில் 30 முறை இடமாற்றம் பெற்ற போலீஸ் அதிகாரி

நேர்மைக்கு கிடைத்த பரிசு: ஆந்திராவில் 18 ஆண்டில் 30 முறை இடமாற்றம் பெற்ற போலீஸ் அதிகாரி
Updated on
1 min read

பொதுட்டூர்: ஆந்திர மாநிலம் பொதுட்டூர் முதலாவது டானா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம். கடந்த டிச.18ம் தேதி பதவியேற்றது முதல் அரசியல் வாதிகளின் ‘அழுத்தங்களுக்கு’ தலை வணங்காமல் நேர்மையாக பணியாற்றி வந்தார்.

சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து அவரது பாணியில் எச்சரிக்கை கொடுத்துள்ளார். ரவுடிகள், கிரிக்கெட் சூதாட்ட கும்பல், பழைய குற்றவாளிகள், வழக்குகள் நிலுவையில் இருக்கும் அரசியல் வாதிகளை அழைத்து நீதிமன்றத்தில் ஆஜராக கவுன்சிலிங் கொடுத்துள்ளார். கிராமப் புறங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்களையும் கண்டித்துள்ளார். இதனால் மக்களிடையே இன்ஸ்பெக்டரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில், பதவியேற்ற வெறும் 40 நாட்களிலேயே இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கடந்த 18 ஆண்டுகளில் 30 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என போலீஸ் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நேர்மைக்கு கிடைத்த பரிசு: ஆந்திராவில் 18 ஆண்டில் 30 முறை இடமாற்றம் பெற்ற போலீஸ் அதிகாரி
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | திரை தேவதைகள் 02

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in