“பாஜக-வினர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவதன் பின்னணி என்ன?” - ரேவந்த் ரெட்டி விளக்கத்தால் சர்ச்சை

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி

Updated on: 
1 min read

புதுடெல்லி: “பிரதமர் மோடி மற்றும் பல பாஜக தலைவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவதை நாம் கண்டுள்ளோம். ஆனால், அவர்கள் எப்போதாவது ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டு நாம் கண்டது உண்டா? அதன் பின்னணி என்னவென தெரியுமா?” என்று தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். அது சர்ச்சையாகி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் ரேவந்த் ரெட்டி இதை தெரிவித்தார். “நாங்கள் திராவிடர்கள். எங்களுக்கென தனிப்பட்ட மரபுகளும், நம்பிக்கைகளும் உள்ளன. நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள். அவர்களோ (பாஜக-வினர்) தங்களை ராமபிரானின் பக்தர்களாக அடையாளம் செய்து கொள்கிறார்கள்.

ராமபிரானை அரசியல் ரீதியாக அடையாளப்படுத்தி வருகின்றனர் பாஜக-வினர். அது உணர்ச்சி சார்ந்தது. பிரதமர் மோடி மற்றும் பல பாஜக தலைவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவதை நாம் கண்டுள்ளோம். ஆனால், அவர்கள் எப்போதாவது ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டு நாம் கண்டது உண்டா? அதை அவர்கள் விரும்புவது கூட இல்லை.

சிவபெருமான் ஏழைகளின் கடவுள். ராமபிரான் பணம் படைத்தவர்களின் கடவுள். பாஜக பணம் படைத்தவர்களுக்கான கட்சி. அதுதான் இதன் பின்னணியில் உள்ள லாஜிக்” என அவர் கூறினார்.

பாஜக தாக்கு:

“இஸ்லாமியர்கள் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் இஸ்லாமியர்கள் என்று பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி, இப்போது இந்து கடவுள் குறித்து பேசியுள்ளார். கடவுள் சிவன் மற்றும் ராமர் குறித்த அவரது பேச்சு அரசியல் ரீதியான பிளவை வடக்கு மற்றும் தெற்கில் ஏற்படுத்துகிறது” என்று மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரதமர் மோடியின் தொகுதி வாரணாசி. அந்தப் பகுதியின் ஆன்ம அடையாளம் காசி விஸ்வநாதர். பல்வேறு காலகட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக-வினர் தங்களை சிவபெருமான் உடன் தொடர்புப்படுத்திக் கொண்டது உண்டு. ஆனால், பிளவு அரசியலில் ரேவந்த் ஈடுபடுகிறார்” என்று பண்டி சஞ்சய் குமார் குற்றச்சாட்டு வைத்தார்.

<div class="paragraphs"><p>தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி</p></div>
தேடப்படும் குற்றவாளி பட்டியலில் கோல்டி பிரார்: 1 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்த எஃப்.பி.ஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in