வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா? - பிரதமர் மோடி மறுப்பு

பிரதமர் மோடி 

பிரதமர் மோடி 

Updated on
1 min read

புது டெல்லி: வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி அல்லது கூடுதல் கட்டணம் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான ஊடக செய்தி முற்றிலும் பொய்யானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி, செஸ் அல்லது கூடுதல் கட்டணம் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், ஆனால் இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. இதில் ஒரு துளிகூட உண்மை இல்லை. வெளிநாட்டுப் பயணங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் கேள்விக்கே இடமில்லை. நமது மக்கள் வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குவதையும், வாழ்வதை எளிதாக்குவதையும் மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். ஒரு ஊடகச் செய்தியை பிரதமரே மறுப்பது அரிதான நிகழ்வாகும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்காசிய மோதலின் காரணமாக, பொருளாதாரத்தை வலுப்படுத்த எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் தங்கம் வாங்குவதை ஒத்திவைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து தங்கம் மீதான இறக்குமதி வரி சில நாட்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. மேலும், பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.3 என வெள்ளிக்கிழமை அன்று உயர்த்தப்பட்டது.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி&nbsp;</p></div>
ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் பிரதமர் மோடி: எல்பிஜி, பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in