26 பிஎப்ஐ நிர்வாகிகள் மீது யுஏபிஏ சட்டத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு

26 பிஎப்ஐ நிர்வாகிகள் மீது யுஏபிஏ சட்டத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: பாப்​புலர் பிரன்ட் ஆப் இந்​தியா (பிஎப்ஐ) அமைப்பை சேர்ந்த 26 நிர்​வாகி​கள் மீது, குற்​றச்​சாட்​டு​களைப் பதிவு செய்ய டெல்லி நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்​ளது.

கடந்த 2006-ம் ஆண்​டில் கேரளா​வில் பிஎப்ஐ அமைப்பு தொடங்கப்பட்​டது. இந்த அமைப்​புக்கு 22 மாநிலங்​களில் கிளை​கள் இருந்​தன. டெல்லி ஷாகின் பாக் போராட்​டம், பெங்​களூரு கலவரம், பிரயாக்ராஜ், சகாரன்​பூர் கலவரம் ஆகிய​வற்​றில் பிஎப்ஐ மீது குற்​றம் சாட்டப்​பட்​டது.

பல்​வேறு மாநிலங்​களில் மதரீ​தி​யான கொலைகளி​லும் இந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் மீது பல்​வேறு வழக்​கு​கள் பதிவு செய்யப்பட்​டன.

இந்​தச் சூழலில் கடந்த 2022-ம் ஆண்​டில் நாடு முழு​வதும் பிஎப்ஐ அமைப்​பின் நிர்​வாகி​களின் வீடு, அலு​வல​கங்​களில் தேசிய புல​னாய்வு அமைப்பு (என்​ஏஐ) சோதனை நடத்​தி​யது. ஏராள​மானோர் கைது செய்​யப்​பட்​டனர். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு செப்​டம்​பர் 28-ம் தேதி பிஎப்ஐ அமைப்​புக்கு மத்​திய உள்​துறை அமைச்​சகம் தடை விதித்​தது.

பிஎப்ஐ தலை​வர் சலாம், துணைத் தலை​வர் அப்​துல் ரஹ்​மான், பொதுச் செய​லா​ளர் அனீஸ் அகமது உட்பட 26 பேர் மீதான வழக்கு டெல்​லி​யில் உள்ள என்ஏஐ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

கடந்த வியாழக்​கிழமை வழக்கு விசா​ரணைக்கு வந்த போது தேசிய புல​னாய்வு அமைப்பு (என்​ஐஏ), பிஎப்ஐ சார்​பில் வாதங்கள் வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி பிர​சாந்த் சர்மா நேற்று முன்​தினம் ‘‘மதச்​சார்​பற்ற இந்​திய அரசை கவிழ்த்து வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் முஸ்​லிம் ஆட்​சியை ஏற்​படுத்த ஆயுத போராட்​டம் நடத்த பிஎப்ஐ சதித் திட்டம் தீட்​டிய​தாக குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது. இந்த வழக்​கில் தொடர்​புடையோர் சதித் திட்​டத்​தில் ஈடு​பட்​டிருக்​கலாம் என்று சந்​தேகம் எழுந்​துள்​ளது. எனவே பிஎப்ஐ அமைப்​பின் தலை​வர் உட்பட அந்த அமைப்​பின் 26 நிர்​வாகி​கள் மீது யுஏபிஏ சட்​டத்​தின் கீழ் குற்​றச்​சாட்​டு​களைப் பதிவு செய்ய வேண்​டும். வழக்​கின் அடுத்த வி​சா​ரணை ஜூலை 10-ம் தேதி நடை​பெறும்’’ என்று உத்தரவிட்டார்.

26 பிஎப்ஐ நிர்வாகிகள் மீது யுஏபிஏ சட்டத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு
நிலக்கரி சுரங்க பகுதியைப் பசுமையாக்க 16 லட்சம் மரக்கன்றுகளை நட்டது அதானி நிறுவனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in