5 ஆண்டில் பொருளாதாரம் ரூ.40 லட்சம் கோடியாகும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை

5 ஆண்டில் பொருளாதாரம் ரூ.40 லட்சம் கோடியாகும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் அடுத்த மாதம் 23 மற்​றும் 29ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதை முன்னிட்டு முதல்​வர் மம்தா பானர்ஜி திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி​யின் தேர்​தல் அறிக்​கையை நேற்று முன்​தினம் வெளியிட்டார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: திரிண​மூல் காங்​கிரஸ் தலைமையி​லான அரசு மேற்​கு​ வங்​கத்​தில் 15 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. இந்த கால​கட்​டத்​தில் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்​சியை மேற்​கு​ வங்​கம் கண்டுள்ளது. நாங்​கள் எங்​கள் பணி​யின் மீது நம்​பிக்கை வைத்துள்​ளோம்.

மேற்​கு​ வங்க மாநிலத்​தின் பொருளா​தா​ரம் கடந்த 15 ஆண்டுகளில் 6 மடங்கு வளர்ச்​சி​யடைந்​துள்​ளது. தனி ​நபரின் சராசரி வரு​மானம் 3 மடங்கு அதி​கரித்​துள்​ளது. 1.72 கோடி மக்களை ஏழ்​மையி​லிருந்து மாநில அரசு மீட்​டுள்​ளது. மேற்​கு​வங்க மாநிலத்​தின் மூலதன செலவு 18 மடங்கு அதி​கரித்​துள்​ளது.

கட்​டமைப்பு செலவு 7 மடங்கு அதி​கரித்​துள்​ளது. வேலை​ வாய்ப்பின்​மை​யின் வீதம் கடந்த 6 ஆண்​டு​களில் 45.65 சதவீதம் குறைந்துள்​ளது. அடுத்த 10 ஆண்​டு​களில் மேற்கு வங்​கத்தை நாட்டிலேயே 3-வது பெரிய பொருளா​தார மாநில​மாக மாற்ற உறுதி எடுத்​துள்​ளோம். கடந்த 2 நிதி​யாண்​டு​களில் மேற்​கு​ வங்கம் இரட்டை இலக்க பொருளா​தார வளர்ச்​சியை எட்டியுள்ளது.

இதன் சராசரி 10.5 சதவீத​மாக உள்​ளது. அடுத்த 5 ஆண்​டு​களில் மேற்​கு ​வங்​கத்​தின் பொருளா​தா​ரம் 40 லட்​சம் கோடி​யாக உயரும். நவீன வசதி​களு​டன் கூடிய உலகளா​விய மையம், நீர்​வழிப் போக்கு​வரத்​து, புதிய போக்​கு​வரத்து மையங்​கள் மேற்​கு ​வங்கத்தில் உரு​வாகி, கிழக்கு இந்​தி​யா​வின் நுழை​வாயி​லாக மேற்கு வங்​கம் மாறும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

5 ஆண்டில் பொருளாதாரம் ரூ.40 லட்சம் கோடியாகும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
அசாமில் போலீஸ் முகாம் மீதான தாக்குதலில் 4 பேர் காயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in