“நீட் விவகாரத்தில் விவாதிக்க தயார்; நாடாளுமன்றத்தை முடக்காதீர்” - எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு கோரிக்கை

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு
Updated on
1 min read

புது டெல்லி: “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. எனவே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம்” என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்கு பதிலாக அவையில் ஆக்கபூர்வமான முறையில் பங்கேற்க வேண்டும். விவாதம் நடத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், அவையில் நேர்மறையான பங்கை செலுத்துவீர்கள். ஆனால் நாடாளுமன்ற விவாதத்தைத் தவிர்க்க விரும்பினால், நீங்கள் அடுத்தடுத்து நிபந்தனைகளை விதிக்கத் தொடங்குவீர்கள்.

விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் முன்வைக்கலாம். ஆனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்படக்கூடாது.

நாங்கள் மனதார எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறோம், நாடாளுமன்றத்தை முடக்காதீர்கள். இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான மசோதாக்களும், மிக முக்கியமான பணிகளும் உள்ளன. அவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நாட்டில் நடைபெறும் அனைத்துத் தேர்வு பிரச்சினைகள் குறித்தும் முதலில் விவாதத்தைத் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே இது அனைவருக்கும் கவலைக்குரிய விஷயமாகும். பல இடங்களில் வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளதால், இது ஒரு கட்சி அல்லது ஒரு மாநிலத்திற்கான பிரச்சினை மட்டும் இல்லை.” என்று தெரிவித்தார்.

கிரண் ரிஜிஜு
“வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி” - மவுனம் கலைத்த பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in