திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது

திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது
Updated on: 
1 min read

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து செல்​கின்​றனர். இவர்​களின் வசதிக்​காக திரு​மலை​யில் ‘தர்ம ரதம்’ என்​னும் பெயரில் 50 பேட்​டரி பேருந்​துகள் இலவச​மாக இயக்கப்படுகின்றன.

திரு​மலை​யில் ஆட்​டோக்​கள், ரேபிடோ உள்​ளிட்ட வசதி​கள் இல்லாததால், பக்​தர்​களுக்கு இலவச பேருந்து வசதியை திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​படுத்தி கொடுத்​துள்​ளது. இந்தப் பேருந்​துகள் எப்​போது வரும்? எங்கு செல்​லும்? என்​பது குறித்து சமீபத்​தில் ‘வெங்​க​டாத்​ரி’ செல்​போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்​நிலை​யில், இலவச பேருந்​துகள் நின்று செல்​லும் இடங்​களில் பக்​தர்​களின் வசதிக்​காக ஸ்மார்ட் பேருந்து நிறுத்​தங்​கள் ஏற்​பாடு செய்​யப்பட உள்​ளன. இந்த ஏற்​பாடு​களைச் செய்ய ரேமாண்ட்ஸ் நிறு​வனம் முன் வந்​துள்​ளது. ஏற்​கெ​னவே உள்ள 5 பேருந்து நிறுத்​தங்​கள் உட்பட மொத்​தம் 21 பேருந்து நிறுத்​தங்​கள் அதிநவீன வசதி​யுடன் இங்கு அமைக்​கப்பட உள்​ளன.

திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது
புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்புடைய ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? - அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி

X