

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் நடந்த கலப்பட நெய் விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என ஆந்திர அரசுக்கு சிபிஐ விசாரணை குழு பரிந்துரை செய்தது. அதன்பேரில், தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவரை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரவிசந்திராவை அரசு தற்காலிக நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்தது. சமீபத்தில் அவரை நிரந்தர நிர்வாக அதிகாரியாக பணி நியமனம் செய்து உத்தரவிட்டது.
அதன்பேரில் நேற்று காலை 7.44 மணிக்கு ஏழுமலையான் கோயிலில் பதவி பொறுப்பேற்றார். முன்னதாக ரவிசந்திரா தம்பதியினர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி தீர்த்த பிரசாதங்கள், மற்றும் சுவாமியின் திரு உருவப்படத்தையும் வழங்கி கவுரவித்தார்.