

புதுடெல்லி: ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) 68-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் தலைமையக்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்தாண்டு சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி சுதர்ஸன சக்கர திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின்படி நாட்டில் உள்ள முக்கிய இடங்கள் அனைத்திலும் வான் பாதுகாப்பு கருவிகள் நிறுவப்படும். வான் பாதுகாப்பு கருவியின் முக்கியத்துவத்தை நாம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பார்த்தோம். இது டிஆர்டிஓ அமைப்பின் செயல்பாடு மற்றும் உறுதிக்கு சான்றாக உள்ளது. நாட்டின் முக்கிய இடங்கள் அனைத்திலும் சுதர்ஸன சக்கரம் வான் பாதுகாப்பு கருவிகள் அமைக்கும் இலக்கை டிஆர்டிஓ விரைவில் அடையும்.
புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை அதிகரிப்பதில் டிஆர்டிஓ தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். டிஆர்டிஓ தனது தயாரிப்புகள், செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் கூறினார்.