தோனி முதல் ரொனால்டோ வரை: 2026-ல் ஓய்வு பெறக்கூடிய ஆடுகள நாயகர்கள்

தோனி முதல் ரொனால்டோ வரை: 2026-ல் ஓய்வு பெறக்கூடிய ஆடுகள நாயகர்கள்
Updated on
1 min read

சென்னை: 2026-ல் கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி என பல்வேறு விளையாட்டுகளில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதே வேளையில் நடப்பு ஆண்டில் பல்வேறு விளையாட்டுகளில் அங்கம் வகிக்கும் முக்கிய வீரர்கள் தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டு களத்தில் இருந்து ஓய்வு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ‘யார், யார்?’ என பார்ப்போம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். அதேபோல தான் ஓய்வு பெறும் நேரம் நெருங்கி வருவதாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். அதற்கான தருணம் வரும்போது அதை அறிவித்து விடுவேன் என அவரே தெரிவித்துள்ளார்.

நோவக் ஜோகோவிச்: டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் (ஆடவர் - 24) பட்டம் வென்ற வீரர் என்ற சாதனைக்காக அறியப்படுவர் ஜோகோவிச். தொடர்ச்சியாக கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இளம் வீரர்களுக்கு கடும் சவால் அளித்து வருகிறார். 38 வயதான அவர், நடப்பு ஆண்டில் நான்கு கிராண்ட் ஸ்லாம் தொடர்களுடன் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸி: கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் அவர் அர்ஜெண்டினா அணிக்காக விளையாட உள்ளார். அதுவே அவர் சர்வதேச அளவில் தன் தேசிய அணிக்காக பங்கேற்கும் கடைசி தொடராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-ல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

தோனி: கடந்த 2019 உலகக் கோப்பை தொடர் உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இருப்பினும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 44 வயதான தோனி பங்கேற்று விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக எதிர்வரும் ஐபிஎல் 2026 சீசன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி முதல் ரொனால்டோ வரை: 2026-ல் ஓய்வு பெறக்கூடிய ஆடுகள நாயகர்கள்
‘மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்’ - எலான் மஸ்க் @ 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in