ஓணம் பண்டிகைக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகைக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்
Updated on
1 min read

சென்னை: ஓணம் பண்​டிகையை முன்​னிட்​டு, பயணி​களின் வசதிக்​காக 100-க்​கும் மேற்​பட்ட சிறப்பு ரயில்​கள் விரை​வில் அறிவிக்​கப்​படும் என்​று, ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

நடப்​பாண்​டுக்​கான 10 நாள் ஓணம் பண்​டிகை கொண்​டாட்​டங்​கள் ஆக.16-ம் தேதி தொடங்​கி, ஆக.26-ம் தேதி வரை திரு​வோணம் திரு​நாளு​டன் நிறைவடைகிறது. இந்த விழா காலம் மற்​றும் அதனைத் தொடர்ந்து நடை​பெறும் சுற்​றுலா நிகழ்​வு​களால் பயணி​களின் எண்​ணிக்கை பெரு​மளவு அதி​கரிக்​கும். எனவே, பயணி​கள் வசதிக்​காக, 100-க்​கும் மேற்​பட்ட சிறப்பு ரயில்​கள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டு உள்​ளது.

இது குறித்​து, ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​யுள்​ள​தாவது: கேரளா முழு​வதும் வெகு விமரிசை​யாகக் கொண்​டாடப்​படும் ஓணம் பண்​டிகை​யின் போது, பயணம் செய்​யும் பயணி​களின் நலன் கரு​தி, 100-க்​கும் மேற்​பட்ட சிறப்பு ரயில் சேவை​களை ரயில்வே அமைச்​சகம் விரை​வில் அறிவிக்​கும்.

கேரள மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் செல்​வதற்​கான பயணத் தேவை​களைப் பூர்த்தி செய்​வதில் ரயில்வே அமைச்​சகம் கொண்​டுள்ள தொடர்ச்​சி​யான அர்ப்​பணிப்​பையே இந்த நடவடிக்கை பிர​தி பலிக்​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

ஓணம் பண்டிகைக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்
இந்​தோ​னேசி​யா​வில் மோடிக்கு உற்​சாக வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in