மேற்கு வங்கம், ஜார்க்கண்டில் 42 இடங்களில் சோதனை

மேற்கு வங்கம், ஜார்க்கண்டில் 42 இடங்களில் சோதனை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் பிர்​பும், புருலி​யா, பஸ்​சிம் பர்த்​மான், பங்​குரா ஆகிய மாவட்​டங்​களில் நிலக்​கரி வயல்​கள் உள்​ளன. அங்கு சட்​ட​விரோத​மாக நிலக்​கரி எடுத்​த​தாக அரசின் ‘ஈஸ்ட்​டர்ன் கோல் பீல்ட்​ஸ்’ நிறு​வனம் கடந்த 2020-ல் புகார் அளித்​தது. இது தொடர்​பாக கடந்த 2021 வரை 597 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு 28 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்த வழக்​கில் மேற்கு வங்​கம் மற்​றும் ஜார்க்கண்​டில் 42 இடங்​களில் 100-க்​கும் மேற்​பட்ட அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று காலை முதல் சோதனை நடத்​தினர். மேற்கு வங்​கத்​தில் கொல்​கத்​தா, ஹவு​ரா, துர்​காபூர், புருலியா ஆகிய மாவட்​டங்​களில் 24 இடங்​களில் சோதனை மேற்​கொண்​டனர்.

இது​போல் ஜார்க்​கண்​டில் 18 இடங்களில் ராஞ்சி அலு​வலக அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். வீடு​கள், அலு​வல​கங்கள், ஆலைகள் மற்​றும் பிற இடங்களில் இந்த சோதனை நடை​பெற்​றது. இதில் பெரு​மளவு ரொக்​கம், தங்க நகைகள், வெள்​ளிப் பொருட்​கள் மற்​றும் ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

மேற்கு வங்கம், ஜார்க்கண்டில் 42 இடங்களில் சோதனை
பிறந்த குழந்தையின் உடலை கவ்வியபடி சுற்றிய தெரு நாய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in