

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.
இதை விமர்சித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நமது மக்கள் விருப்பப்படி உருவாவதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கை. அது நமது வரலாறு, புவியியல், சத்யம் மற்றும் அகிம்சை போன்ற நமது ஆன்மீக நெறிமுறைகள் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால் நாம் தற்போது காண்பது கொள்கை அல்ல. தனிநபரின் சமரச கொள்கையால் ஏற்பட்ட விளைவு. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் வர்த்தக கொள்கையை அமெரிக்கா தான் முடிவு செய்யும் என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் முன்பே பேசிய வீடியோவையும், இத்தகவலுடன் இணைத்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘அமெரிக்காவின் பிளாக்மெயில் எவ்வளவு காலம் தொடரும்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.