இண்டிகோ சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் விமர்சனம்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: இண்​டிகோ விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்ட பிரச்​சினை குறித்து கருத்து தெரி​வித்த காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, ஒரு நிறு​வனத்​தின் ஏகபோகத்​தால் அப்​பாவி மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இண்​டிகோ விமானங்​களின் சேவை ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தால், பயணி​கள் கடும் பாதிப்பை சந்​தித்​துள்​ளனர். இதுகுறித்​து, அவர் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பாஜக தலை​மையி​லான மத்​திய அரசு, ஏகபோக​மாக ஒரு நிறு​வனத்​தின் ஆதிக்​கத்​தில் விட்​டதன் விளைவு​தான் இது.

அதனால் விமானங்​கள் ரத்​து, தாமதம் என அப்​பாவி மக்​கள் பாதிக்​கப்​படு​கின்​றனர். அப்​பாவி மக்​கள் அதற்​கான விலையை கொடுக்​கின்​றனர். நாட்​டில் எந்த துறை​யாக இருந்​தா​லும், ஆரோக்​கிய​மான போட்டி இருக்க வேண்​டும். ஒரு நிறு​வனமே ஆதிக்​கம் செலுத்​தும் வகை​யில் இருக்க கூடாது. இதில் மேட்ச் பிக்​சிங் இருக்க கூடாது. இவ்​வாறு கூறி​யுள்​ளார்.

நோட்​டீஸ்: மேலும் இந்த விவ​காரம் குறித்து மாநிலங்​களவை​யில் விவா​திக்​க​வும் இதற்கு சிவில் விமானப் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ராம் மோகன் நாயுடு பதில் அளிக்க வேண்​டும் என வலி​யுறுத்தியும் சிவசேனா (உத்​தவ் அணி) எம்​.பி. பிரி​யங்கா சதுர்​வேதி விதி 180-ன் கீழ் நோட்​டீஸ் அளித்​துள்​ளார்.

அதில், “இண்​டிகோ நிறு​வனத்​தில் நூற்​றுக்​கணக்​கான விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​ட​தால், பயணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். முக்​கிய நகரங்​களில் பயணி​கள் குவிந்​துள்​ளனர். இந்த விஷ​யத்​தில் அமைச்​சர் ராம் மோகன் நாயுடு உடனடி​யாக கவனம் செலுத்த வேண்​டும். இது பொது​மக்​களின் அவசர பிரச்​சினை. எனவே, மாநிலங்​களவை​யில் இதுகுறித்து உடனடி​யாக விவாதம் நடத்த வேண்​டும். அமைச்​சர் பதில் அளிக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் போராட்​டம்: சென்னை விமான நிலை​யத்​தி​லும் 4-வது நாளாக நேற்று இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமான நிறு​வனங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. வெளி​நாடு மற்​றும் உள்​நாட்டு புறப்​பாடு, வருகை என 60-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. புறப்​பாடு, வருகை என 22 விமானங்​கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமத​மாக இயக்​கப்​பட்​டன. இதனால் பாதிக்​கப்​பட்​ட 100-க்​கும்​ மேற்​பட்​ட பயணி​கள்​, சென்​னை ​விமான நிலை​யத்​தில்​ புறப்​​பாடு பகு​தி​யை ​முற்​றுகை​யிட்​டு ​போ​ராட்​டம்​ நடத்​தினர்​. இதையடு்த்​து வி​மான நிலை​ய ​போலீ​ஸார்​, ​பாது​காப்​பு அ​தி​காரி​கள்​ ​விரைந்​து வந்​து பயணி​களை ச​மா​தானப்​படுத்​தினர்​.

ராகுல் காந்தி
‘நிலைமை சீராக 5 முதல் 10 நாட்கள் ஆகும்’ - இண்டிகோ விமான நிறுவன சிஇஓ விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in