‘நிலைமை சீராக 5 முதல் 10 நாட்கள் ஆகும்’ - இண்டிகோ விமான நிறுவன சிஇஓ விளக்கம்

‘நிலைமை சீராக 5 முதல் 10 நாட்கள் ஆகும்’ - இண்டிகோ விமான நிறுவன சிஇஓ விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1000+ இண்டிகோ விமான சேவை ரத்து, தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது இண்டிகோ. இருப்பினும் அண்மை கால​மாக விமான புறப்பாட்டில் தாமதம், விமான சேவை ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்​சினை​களை இண்டிகோ நிறுவனம் எதிர்​கொண்டு வரு​கிறது. தொழில்நுட்ப கோளாறு, வானிலை காரணமாக (பனி) விமான புறப்பாட்டில் ஏற்பட்டுள்ள கால தாமதம், விமானிகளின் ஓய்வு நேர வரம்பு, பணியாளர் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் தங்களின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்திருந்தது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முதல் முறையாக இது குறித்து இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். “கடந்த சில நாட்களாக எங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் சுமார் ஆயிரம் விமானங்களின் சேவை ரத்தானது. இது எங்களது தினசரி விமான இயக்கத்தில் 50 சதவீதத்துக்கு மேலானது. சனிக்கிழமை அன்று ஆயிரம் விமான சேவை ரத்து என்ற பாதிப்பு இருக்காது. அதற்காக போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

மீண்டும் எங்களது விமான சேவை சீராகி இயல்புக்கு திரும்ப 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கிறோம். படிப்படியாக டிச.10 மற்றும் 15-ம் தேதிக்குள் நிலைமை சீராகும். அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். பயணிகள் தங்கள் விமான பயணத்தின் அப்டேட்களை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இண்டிகோ சார்பாக பயணிகள் எதிர்கொண்டு வரும் இந்த சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

‘நிலைமை சீராக 5 முதல் 10 நாட்கள் ஆகும்’ - இண்டிகோ விமான நிறுவன சிஇஓ விளக்கம்
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in