“பெண்களின் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வது வெட்கக்கேடானது” - ராகுல் விமர்சனம்

“பெண்களின் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வது வெட்கக்கேடானது” - ராகுல் விமர்சனம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள பெண்​கள் இடஒதுக்​கீடு மற்​றும் தொகுதி மறு​வரையறை மசோ​தாக்​கள், பெண்​களின் பெய​ரால் நாட்​டின் தேர்​தல் வரைபடத்தை மாற்​றும் முயற்சி என்று நாடாளு​மன்​றத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

மக்​களவை​யில் நேற்று நடை​பெற்ற விவாதத்​தில் கலந்​து​கொண்டு ராகுல் காந்தி பேசி​ய​தாவது: இந்​தச் சபை​யில் இன்று சில உண்​மை​கள் உரக்​கச் சொல்​லப்பட வேண்​டும். தற்​போது கொண்டு வரப்​பட்​டுள்ள மசோதா பெண்​களுக்​கானது அல்ல. இது பெண்​களை முன்​னிறுத்​தி, நாட்​டின் தேர்​தல் வரைபடத்தை மாற்றி அமைக்​கும் ஒரு தந்​திரமே தவிர வேறொன்​றுமில்​லை.

கடந்த 2023-ம் ஆண்டு இதே சபை​யில் நிறைவேற்​றப்​பட்ட மசோ​தாவுக்​கும், இப்​போது தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள 131-வது அரசி​யலமைப்​புத் திருத்த மசோ​தாவுக்​கும் பெரும் வேறு​பாடு உள்​ளது. 2023 மசோ​தாவை இன்​னும் 10 ஆண்​டு​களில் அமல்​படுத்​து​வோம் என்று பாஜக​வினர் கூறினர். ஆனால், தற்​போதைய மசோதா முற்​றி​லும் மாறு​பட்​டது.

உண்​மை​யிலேயே பெண்​களுக்கு இடஒதுக்​கீடு அளிக்க வேண்​டும் என்ற எண்​ணம் அரசுக்கு இருந்​தால், பழைய மசோ​தாவை உடனடி​யாகக் கொண்டு வாருங்​கள். அதனை இப்​போதே அமல்​படுத்த எதிர்க்​கட்​சிகள் அனைத்​தும் ஆதரவு அளிப்​போம். அதை விடுத்​து, பெண்​களின் பின்​னால் ஒளிந்​து​கொண்டு அரசி​யல் செய்​வது வெட்​கக்​கே​டானது.

தற்​போது கொண்டு வரப்​பட்​டுள்ள இந்த நடவடிக்​கை, சாதி வாரிக் கணக்​கெடுப்​பைத் தவிர்க்​கும் ஒரு முயற்​சி​யாகும். எனது ஓபிசி சகோ​தர, சகோ​தரி​களுக்கு அதி​காரத்தை வழங்​கு​வதற்​குப் பதிலாக, அவர்​களிட​மிருந்து அதைப் பறிக்​கும் முயற்​சியே இது. இவ்​வாறு ராகுல் பேசி​னார்.

முன்​ன​தாக, தனது உரையை நகைச்​சுவை​யுடன் தொடங்​கிய ராகுல் காந்​தி, “பிரதமர் மோடிக்​கும் எனக்​கும் மனைவி சார்ந்த சிக்​கல்​கள் இல்​லை. எனவே அந்​தத் தரப்​பிலிருந்து எங்​களுக்​குத் தகவல்​கள் வரு​வ​தில்லை (இவ்​வாறு அவர் குறிப்​பிட்​டதும் அவை​யில் சிரிப்​பலை உண்​டானது). கடந்த 20 ஆண்டு கால அரசி​யல் வாழ்க்​கை​யில் என்​னால் செய்ய முடி​யாத ஒன்றை எனது சகோ​தரி பிரி​யங்கா காந்தி செய்​துள்​ளார்; அமித் ஷாவை சிரிக்க வைத்​தது​தான் அது.” என்று ராகுல் குறிப்​பிட்டார்.

“பெண்களின் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வது வெட்கக்கேடானது” - ராகுல் விமர்சனம்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in