'வந்தே மாதரம்' விவாதம் குறித்து நான்கு வார்த்தைகளில் பதிலளித்த ராகுல் காந்தி!

ராகுல் காந்தி | கோப்புப் படம்
ராகுல் காந்தி | கோப்புப் படம்
Updated on
1 min read

புது டெல்லி: நாடாளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் குறித்த விவாதம் பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி நான்கு வார்த்தைகளில் பதிலளித்தார்.

'வந்தே மாதரம்' தேசியப் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மக்களவையில் 'வந்தே மாதரம்' குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.8) தொடங்கி வைத்தார்.

இந்த விவாதம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு நான்கே வரியில் பதிலளித்த ராகுல் காந்தி, “ பிரியங்கா காந்தியின் உரையை கேளுங்கள்” என்று கூறினார். இதன் மூலம், பிரியங்கா காந்தி இன்றைய உரையில் அழுத்தமான கருத்துகளை முன்வைப்பார் எனத் தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகையில், 1937 ஆம் ஆண்டு பைசாபாத்தில் நடந்த கட்சியின் கூட்டத்தின் போது 'வந்தே மாதரம்' பாடலின் முக்கியமான வார்த்தைகளை காங்கிரஸ் நீக்கியதாக குற்றம் சாட்டியதால் அரசியல் சர்ச்சை வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு பிரிவினைக்கான விதைகளை விதைத்தன மற்றும் தேசியப் பாடலை துண்டு துண்டுகளாக உடைத்தன என அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், இந்த முடிவு ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும், மற்ற சமூகங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு இணங்கியே சில வார்த்தைகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

மேலும், இந்த கருத்துக்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியது. அதே போல், இக்கருத்தின் மூலம் ரவீந்திரநாத் தாகூரை பாஜக அவமதித்ததாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இந்த விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் நேரு மற்றும் காங்கிரஸை விமர்சித்து பேசினார்.

ராகுல் காந்தி | கோப்புப் படம்
“வந்தே மாதரம் ஒரு மந்திரம்; சுதந்திர இயக்கத்துக்கு உத்வேகம் கொடுத்த முழக்கம்” - பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in